தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (19.6.2023) திருவாரூர் மாவட்டம், திருவாரூர் வட்டம், விளமல் அருகில் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஓடம்போக்கி ஆற்றில் உள்ள ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்டி.ஆர். பாலு, தமிழ்நாடு அரசின் டில்லி சிறப்புப் பிரதிநிதி, ஏ.கே.எஸ். விஜயன், சட்டமன்ற உறுப்பினர்கள் கே. பூண்டி கலைவாணன், சாக்கோட்டை க. அன்பழகன், திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தி. சாருசிறீ மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.