சென்னை, ஜூன் 28 சென்னையில் 26.06.2025 அன்று
அய்.சி.டி. அகாடமி நடத்திய 63-ஆம் ‘பிரிஜ்’25’ என்ற நிகழ் வில், தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின்) நிர்வாகக் குழு உறுப்பினர் வீ.அன்புராஜ் அவர்களுக்கு ‘கல்வியில் மாற்றம் நிகழ்த்துபவர்’ என்ற விருதினைத் தமிழ்நாடு அரசின் தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சர் மாண்புமிகு பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்.
புதுமையான சிந்தனை, தொலைநோக்குமிக்க தலைமைத்துவம், மாற்றத்தை உருவாக்குவதற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மூலம் கல்வியின் தன்மையில் மாற்றத்தை உருவாக்குவதில் வழங்கிய சிறப்பான பங்களிப்புக்காக இவ்விருது வழங்கப்படுவதாக விருதுப் பட்டயத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது முயற்சிகள் வருங்காலக் கற்றலை வடிவமைத்திருப்பதாகவும், கல்வியை மேலும் ஆக்கப்பூர்வமானதாகவும், முன்னோக்கிச் சிந்திப்பதாகவும் ஆக்கியிருப்பதாகப் பாராட்டப்பட்டுள்ளது.