டோனால்ட் டிரம்பின் மேம்போக்குத் தனத்திற்கு உலகின் முக்கியத் தலைவர்கள் ‘சர்தான் போடா’ என்றனர்.
சீனாவோடு வரிவிதிப்பு விளையாண்டார். சீனாவும் பதிலுக்கு 180 விழுக்காடு வரிப்போட்ட பிறகு, பொட்டிப் பூனையாக டிரம்ப் அடங்கிவிட்டார்.
ரஷ்ய அதிபர் புடினோடு பேசி, “ருஷ்யா – உக்ரைன் போரை நிறுத்துவேன்” என்றார். விளாடிமிர் புதினோ, “என்னிடம் பேசி பயனில்லை” என்று அறிக்கை விட்டார். உடனே பேச்சை மாற்றிக் கொண்டார் டிரம்ப்.
“ஈரானின் அணு உலையைத் தகர்த்து விட்டேன். ஈரான் இனி சரனடையும்” என்றார். ஈரானோ மறுநாளே கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ நிலையைத் தாக்கியது. அரவமில்லாமல் சீஸ்பயர், சீஸ்பயர், சீஸ்பயர் என்று டிரம்ப் அறிக்கை விட்டு ஈரான் அதிபரிடம் ஏவுகனைகளை கொண்டு தாக்குவதை நிறுத்துங்கள் தயவு செய்து என்று கொஞ்சியதாக அமெரிக்க நாளிதழ்களே செய்தி வெளியிட்டனர்.
இந்த நிலையில், ஒரே ஒருவர் மட்டுமே தன்னை உலக குரு என்று கூறிகொண்டு டிரம்பின் பேச்சிற்கு மறுபேச்சு பேசாமல் பம்மிகொண்டு இருக்கிறார். யார் அவர்??