டில்லி ஒன்றும் ரொட்டி சுடும் ‘ரொட்டிக்கல்’ அல்ல தண்ணீர் விழுந்ததும் ஆவியாகிவிட – டில்லி முதலமைச்சர் ரேகா குப்தாவின் புதிய கண்டுபிடிப்பு
தலைநகர் டில்லியில் பெய்த மழையால் பல இடங்களில் நீர் தேங்கி உள்ளது.
இது குறித்து புகார் அளித்த மக்களிடம் பேசிய ரேகா குப்தா, “டில்லி என்ன ரொட்டிக்கல் மீதா உள்ளது?
மழை நீர் பெய்த உடன் ஆவியாகிவிட… பூமி மெல்ல மெல்ல தண்ணீரை உள்ளே இழுக்கும்.
இது இறைவன் விதித்தது. இதை எதிர்த்து அரசு என்ன செய்யமுடியும்?” என்று கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு டில்லியில் மழைபெய்து சாலையில் நீர் தேங்கிய போது மாநகராட்சி உறுப்பினராக இருந்த இவர் காகிதக் கப்பல் செய்து மழை நீரில் மிதக்கவிட்டு ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
டில்லியில் பாஜக ஆட்சி, டில்லி மாநகராட்சி பாஜக கையில், டில்லி மேயர் பாஜக, டில்லி முதலமைச்சர் பாஜக, துணை நிலை ஆளுநர் பாஜக ஆதரவாளர்.
பிரதமர் பாஜக… இப்படி 6 இஞ்சின் அரசு இருந்தும் டில்லியில் மழை வந்தால் நீர் இறைவன் விட்ட வழிப்படிதான் செல்லுமாம், அதுவரை மக்கள் காத்திருக்கவேண்டுமாம்.