ஜாதியைக் காப்பதற்காகவும், ஜாதியை ஒழிப்பதற்காகவும் உள்ள ஸ்தாபனங்கள்தான் பல பெயர்களால் அழைக்கப்படுகின்றன. என்றாலும், எல்லாவற்றையும் இரு கூறாக்கினால், ஜாதி ஒழிய வேண்டுமென்பதற்காகப் போராடுகின்றதான ஒன்றும், ஜாதி ஒழியக் கூடாது; பழைமை அப்படியே பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக மற்றொன்றுமாகப் போராடிக் கொண்டு வருகின்றன. இந்தியா பூராவும் நடைபெறும் இப் போராட்டம் -அது ஒரு சமுதாயப் போராட்டமேயன்றி, அரசியல் போராட்டம் போன்று தோற்றத்தில் தெரிவதால் அரசியல் அடிப்படையிலான போராட்டம் ஆகுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1687)

Leave a Comment