டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* அண்ணாவையும், பெரியாரையும் பாஜகவிடம் அடமானம் வைத்தவர்கள் தமிழ்நாட்டையும் அடகு வைத்து விடுவார்கள்: அதிமுக மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
தி இந்து:
* குழந்தை பிறந்தவுடன் பிறப்புச் சான்றிதழ் வழங்க வேண்டும்; பிறப்புப் பதிவு முடிந்தவுடன் “ஏழு நாட்களுக்குள்” மின்னணு அல்லது பிற வடிவத்தில் பதிவாளர் பிறப்புச் சான்றிதழ் வழங்க வேண்டும் என மக்கள் தொகை கணக்கெடுப்பு துறை ரிஜிஸ்டிரார் ஜென்ரல் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்.
* கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில், தாடி வைப்பதை “தடைசெய்யும்” ஒரு ‘கொள்கை ஆவணத்தில்’ கையெழுத்திடுமாறு கேட்கப்பட்டதால், காஷ்மீர் பள்ளத்தாக்கைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் மருத்துவர் தனது டிஎன்பி (சிறுநீரகவியல்) இருக்கையை கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக ஜம்மு மற்றும் காஷ்மீர் மாணவர் சங்கம் குற்றம் சாட்டியது. இந்த விடயத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையீட்டை சங்கம் கோரியுள்ளது.
* ஆளுநர் நடத்தும் நிகழ்வுகளில் அரசியல் மற்றும் மதச் சின்னங்களை மட்டுமே காட்சிப்படுத்த அரசமைப்புச் சட்டம் தடை செய்கிறது என்பதை அமைச்சரவை முடிவின் அடிப்படையில், கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் ஆளுநர் அலுவலகத்திற்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டதாக தகவல்.
* பாஜகவின் ‘போலி ஆன்மீகம்’ தமிழ்நாட்டில் வேலை செய்யாது. இது தமிழ்நாடு, தந்தை பெரியார் உருவாக்கிய மண். அண்ணா வளர்த்த மண். கலைஞர் இதை மீட்ட மண். தமிழ்நாடு அனைத்து மதத்தினரும் தங்களின் உரிமையோடும் பிற மதத்தினருடன் நல்லிணக்கத்தோடு வாழுகின்ற மண் இது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பீகார் வாக்குப்பதிவு பட்டியல்களின் திருத்தம்: பலர் விடுபட்டு விடுவார்கள் என்று எதிர்க்கட்சிகள் அச்சம். தேர்தல் ஆணையம் “பாஜகவின் கைப்பாவை போல செயல்படுகிறது” என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா கண்டனம்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
*மகாராட்டிராவில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் ஹிந்தியை மூன்றாவது மொழியாக அறிமுகப்படுத்துவது குறித்து ஆளும் பாஜக கூட்டணி பல்டி. மகாராட்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், அனைத்து பங்குதாரர்களுடன் பேசுவோம், பின்னர் பள்ளிகளில் இந்தியை மூன்றாவது மொழியாக அறிமுகப்படுத்துவோம் என்றும் பேச்சு.
*அரசமைப்பிலிருந்து ‘சோசலிசம்’, ‘மதச்சார்பின்மை’ என்ற சொற்களை நீக்க வேண்டுமாம்; ஆர்.எஸ்.எஸ். தலைவர் தத்தாத்ரேயா ஹொசபலே பேச்சு.
– குடந்தை கருணா