ஈரோடு, ஜூன் 27- ஈரோடு பெரியார் படிப்பக வாசகர் வட்ட சிறப்பு க்கூட்டம் ஈரோடு பெரியார் படிப்பக வாசகர் வட்ட சிறப்புக் கூட்டம் 24.6.2025 செவ்வாய் மாலை 5.55க்கு ரோட்டரி கிளப் குளிர் சாதன அரங்கில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பெரியார் படிப்பக வாசகர் வட்ட தலைவர் அனிச்சம் கனிமொழி தலைமை தாங்கினார் .அனைவரையும் செயலாளர் கவிதா நந்தகோபால் வரவேற்றார். பெரியார் படிப்பு வாசகர் வட்ட கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றிய எம்.எம்.அப்துல்லா
எம்.பி. உரையில் “திராவிடம் என்றால் மனிதநேயம் என்று பொருள் – மனித நேயம் என்றால் அனைத்தும் அனைவருக்கும் என்று பொருள் .நாம் நமது தாய் மொழியான தமிழ் மொழியை காப்பாற்ற வேண்டும் மொழியை இழந்து விட்டால் பண்பாடும் சிதைக்கப்படும் நாடும் சிதைக்கப்படும் பல்வேறு நாடுகள் அதுபோன்று மொழி அழிக்கப்பட்ட நாடுகள் பல, அமெரிக்காவில் செவ்விந்தியர்கள் இருக்கிறார்கள்
ஆனால் செவ்விந்தியருடைய மொழி இல்லை அதற்கு காரணம் ஆங்கிலேயர்கள் முழுமையாக செவ்விந்தியர் மொழியை ஒழித்து விட்டார்கள். அதனால் இப்பொழுது செவ்விந்தியர்கள் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள்.
அதுபோல பீகார், உத்தரப் பிரதேசம், குஜராத் போன்ற நம்முடைய இந்தியாவில் அங்குள்ள அவர்கள் பேசிய தாய்மொழி அழிக்கப்பட்டு தற்போது இந்தி மயமாக்கப்பட்டு அவர்கள் பூர்வீகம் என்ன அவர்களது வரலாறு என்ன என்று தெரியாமல் ஆகி விட்டது.
மொழி என்பது அடுத்த தலைமுறைக்கு வரலாற்றையும் பண்பாட்டையும் கடத்திச் செல்வது. “யாதும் ஊரே யாவரும் கேளீர்” பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ” 2000 ஆண்டுகளுக்கு முன் நாகரிகமாக வாழ்ந்த நமது இனம் என்று 300 ஆண்டுகளுக்கு முன்பு தான் வீரமாமுனிவர் என்ற கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி என்ற பாதிரியாரும், கால்டுவெல்லும் இங்கு வந்து தமிழைப் படித்துக்கண்டுபிடித்துக் கொடுத்தார்கள்.
இரண்டாயிரம் ஆண்டுகளாக நமது தமிழ் மொழி தன்னிகரற்று தனித்து நிற்பதால் நம் வரலாறு தெரிகிறது. அதன் பண்பாடு தெரிகிறது! தொடர்ந்து திராவிட இயக்கம் தமிழ் நாட்டை ஆள்வதால் சமஸ்கிருதம் போன்ற வேற்று மொழிச் சொற்கள் அகற்றப்பட்டு தமிழ் மொழி காக்கப்படுகின்றன என்று தமது உரையில் குறிப்பிட்டார்.
சிறப்புரை முடிந்தவுடன் பெண்களே முன்னின்று நடத்திய சனாதனம் எனும் சீர்திருத்த நாடகம் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றனர். முடிவில் ஆனந்த லட்சுமி நன்றி கூற கூட்டம் நிறைவடைந்தது.
கூட்டத்தில் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் சந்திரகுமார், மேயர் நாகரத்தினம், மாநில தி.மு.க நெசவாளரணி செயலாளர் S.L.T சச்சிதானந்தம்,மாவட்ட தி.மு.க துணைச் செயலாளர் ஆ.செந்தில்குமார் மாவட்ட தி.மு.க பொருளாளர் ப.க.பழனிச்சாமி, பகுதிக்கழக செயலாளர் அக்னி சந்துரு, குறிஞ்சி தண்டபாணி, வி.சி.நடராஜன், கவுன்சிலர்கள் சசிக்குமார், ஜெகதீசன், சக்திவேல், திராவிடர் கழக நிர்வாகிகள் த.சண்முகம், ப.சத்தியமூர்த்தி, தமிழ்க்குமரன், வேணுகோபால், வீ.மா. ஆறுமுகம்ஆகியோர் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தனர்.