புதுடில்லி, ஜூன் 27 இந்தியாவில் இருந்து ஏராளமான பொருட்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்தநிலையில் கடந்த ஏப்ரலில் இந்தியாவில் இருந்து இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு 26 சதவீதம் வரி விதித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார். ஆனால் அதனை 90 நாட்களுக்கு ஒத்திவைத்தார். இந்தநிலையில் ஜூலை 9-ந்தேதியுடன் இந்த காலக்கெடு முடிவுக்கு வர உள்ளது. அதற்கு முன்பாக இந்தியா-அமெரிக்கா இரு நாட்டு வர்த்தக ஒப்பந்தத்தை வரிகுறைப்புடன் மேற் கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்தநிலையில் இந்த வரிவிதிப்பு குறைப்பு பேச்சுவார்த்தை முயற்சி தோல்வியில் முடிந்துள்ளதாகவும், இதனால் வருகிற மாதத்தில் இருந்து இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தகம் குறைந்து பாதிப்பை ஏற்படுத்தும் என இந்திய நிதி ஆய்வு நிறுவனமான கிரிசில் (சி.ஆர்.ஐ.எஸ்.ஐ.எல்) கணித்துள்ளது.