மதுரை, ஜூன்.27- தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக்கட்டணம் வசூலிக்க தடை விதித்து உத்தர விடக் கோரி தென்காசியை சேர்ந்த வழக்குரைஞர் வெங்கட்ரமணா, மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரிய கிளாட் ஆகியோர் முன்பு 25.6.2025 அன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கு
அப்போது மனுதாரர் ஆஜராகி, தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக்கட்டணம் வசூலிக்க ஒன்றிய அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை. மலேசியா, ஜெர்மனி போன்ற பல்வேறு நாடுகளில் தேசிய நெடுஞ்சாலைகள் தொடங்கும் இடத்தில் மட்டுமே சுங்கக்கட்டணம் வசூலிக்கின்ற னர். ஆனால் இங்கு குறிப்பிட்ட தூரத்துக்கு இடையே சுங்கச்சாவடிகளை அமைத்து வாகனங்களுக்கு அதிக கட்டணத்தை வசூலிப்பது ஏற்புடையதல்ல என வாதாடினார். இதற்கு ஒன்றிய அரசு வழக்குரைஞர் ஆஜராகி, இந்த வழக்கு தொடர்பாக உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க கால அவகாசம் கோரினார்
கால விரயம்
பின்னர் நீதிபதிகள், வாகனங்கள் தடையில் லாமல் வேகமாக செல்லவும், நேரத்தை மிச்சப் படுத்தும் நோக்கத்திலும்தான் தேசிய நெடுஞ் சாலைகள் அமைக்கப்பட்டன. ஆனால் மதுரை-சென்னை தேசிய நெடுஞ்சா லையில் பல இடங் களில் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒவ் வொரு சுங்கச் சாவடியிலும் கட்டணம் செலுத்தி விட்டு வாகனங்கள் கடந்து செல்வதற்கு நீண்ட நேரம் ஆகிறது. நேரமும் வீணாகிறது. இதற்கு தீர்வே கிடையாதா? என வேதனை தெரிவித் தனர். விசாரணை முடிவில், இந்த வழக்கில் தேசிய நெடுஞ்சாலைத்துறை இயக்குனர் பதில் மனு வேண்டும் என உத்தரவிட்டு, அடுத்த கட்ட விசாரணையை ஜூலை மாதம் முதல் வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.