”கீதா” பதிப்பகத்திற்கு காந்தி அமைதி விருதா? கோட்சேவுக்கும், சாவர்க்காருக்கும் விருது கொடுப்பது போன்றதே இது!

2 Min Read

காங்கிரஸ் கண்டனம்!

புதுடில்லி, ஜூன் 20- ஒன்றிய அரசின் காந்தியார் அமைதி விருதுக்கு கோரக் பூர் கீதா (Gita) பதிப்பகம் தேர்வு செய் யப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

காந்தியாரின் 125 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது கொள்கை களுக்கு மரியாதை செலுத்தும் வகை யில் சமூகம், பொருளாதாரம் மற்றும் அரசியல் மாற்றத்துக்காக காந்திய வழி களில் சிறந்த பங்களிப்பை வழங்கியவர் களுக்கு கடந்த 1995 ஆம் ஆண்டு முதல் ஒன்றிய அரசால், காந்தி அமைதி விருது வழங்கப்பட்டு வருகிறது. 

தேசியம், இனம், மொழி, ஜாதி, மதம், பாலினம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு வழங்கப்படும் ‘காந்தி அமைதி விருதை’ வென்றவர்களுக்கு ரூ.1 கோடி, பாராட் டுச் சான்றிதழ், நேர்த்தியான பாரம்பரிய கைவினைப் பொருள் அல்லது கைத் தறிப் பொருள் ஆகியவை வழங்கப் படும்.

ஒன்றிய கலாச்சாரத் துறை அமைச் சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “2021 ஆம் ஆண்டுக்கான காந்தி அமைதி விருதுக்கு உத்தரப் பிரதேசத் தின் கோரக்பூரில் இயங்கி வரும் பதிப் பகமான கீதா பதிப்பகம் தேர்வு செய் யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலை மையிலான தேர்வுக்குழு ஒரு மனதாக இதனை தேர்வு செய்துள்ளது” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஒன்றிய அரசின் இந்த தேர்வுக்கு காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சாவர்க்கருக்கும் கோட்சேவுக்கும் விருது அளிப்பதைப் போன்றது இது என அவர் கூறியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட் டுள்ள ட்விட்டர் பதிவில், “நூற்றாண்டு கொண்டாட்டத்தில் உள்ள கீதா பதிப் பகம் ‘காந்தி அமைதி விருது’க்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பதிப்பகம் குறித்து அக்‌ஷயா முகுல் எழுதிய புத்தகத்தில், காந்தியாருடன் கீதா பதிப் பகத்துக்கு இருந்த புயல் போன்ற உறவு குறித்தும், அரசியல், மதம், சமூகம் சார்ந்த விவகாரங்களில் காந்தியாரோடு அந்த பதிப்பகம் எவ்வாறு போரிட்டது என்பது குறித்தும் வெளிப்படுத்தி இருக் கிறார். ‘காந்தி அமைதி விருது’க்கு கீதா பதிப்பகம் தேர்வு செய்யப்பட்டிருப்பது உண்மையில் ஒரு கேலிக்கூத்து. இது சாவர்க்கருக்கும் கோட்சேவுக்கும் விருது கொடுப்பதைப் போன்றது” என குறிப்பிட்டிருந்தார்.

இந்த விவகாரம் குறித்து செய்தி யாளர்களிடம் பேசிய ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் மனோஜ் குமார் ஜா, 

“கீதா பதிப்பகம் சமூக, கலாச்சார முன்னேற்றத்துக்கு அளித்த பங்களிப்பு தான் என்ன? அமைதியை ஏற்படுத்து வதில் அவர்கள் என்ன பங்களிப்பை செய்தார்கள்? விருதை தேர்வு செய் வதில் கவனிக்கப்பட வேண்டிய காரணி கள் இருக்கின்றன. கீதா பதிப்பகத்தை ஊக்குவிக்க விரும்பினால் நீங்கள் அவர்களுக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கொடுக்க முடியும். ஆனால், அதனை காந்தியாரின் பெய ரோடு தொடர்புபடுத்தக் கூடாது” என தெரிவித்திருந்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *