கையெழுத்திட மறுப்பு!
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாடு சீனாவில் நடைபெற்றது. பகல்ஹாம் தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கப்படாததால் அதன் கூட்டு அறிக்கையில் இந்தியா கையெழுத்திட மறுத்து விட்டதாம்
பதுங்கும் அமித்ஷா!
கேள்வி மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியாரையும், அண்ணாவையும் விமர்சித்து இருக்கி றார்களே என்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, அவரது பதில் இது, ‘‘பாஜக நிகழ்ச்சி அல்ல அது, இந்து முன்னணி நிகழ்ச்சி!
‘தினத்தந்தி’ 27.6.2025 பக்கம் 6
நமது கேள்வி: அந்தோ பாவம்! இந்து முன்ன ணியை, பாஜகவும் கைவிட்டு விட்டதே!
ஆக, தந்தை பெரியாரையும், அறிஞர் அண்ணா வையும் மதுரை மாநாட்டில் சிறுமைப் படுத்தியது ஏற்கத்தக்கது அல்ல என்று மறைமுகமாக அமித்ஷா ஒப்புக் கொள்கிறாரோ?
அமைச்சர் தகவல்
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ரூபாய் 150 கோடியில் திட்டப் பணிகள் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்.
பதிலடி!
பாமகவின் இணை பொதுச் செயலாளராக மருத்து வர் ராமதாஸ் நியமனம் செய்த பாமக சட்டமன்ற உறுப்பினர் அருளின் கட்சிப் பதவி பறிப்பு – டாக்டர் அன்புமணி பதிலடியாம்.
நடவடிக்கை
இந்திய தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாமல் இருக்கும் 345 அரசியல் கட்சிகளை நீக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.