கடவுளை நம்புவோர் கைவிடப்படுவர்
மூன்று பக்தர்கள் உடல்கள் மீட்பு!
பத்ரிநாத், ஜூன் 27– சுற்றுலாப் பேருந்து ஒன்று, ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் மராட்டியத்தைச் சேர்ந்த பக்தர்களை ஏற்றிக்கொண்டு பத்ரிநாத் கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தது. பேருந்தில் ஓட்டுநர் உள்பட 20 பேர் இருந்துள்ளனர்.
அந்த பேருந்து நேற்று (26.6.2025) காலை உத்தராகண்ட் மாநிலம் பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. கவுச்சார் அருகே கோல்டிர் கிராம பகுதியில் வந்தபோது, பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் உருண்டது.சுமார் 100 அடி பள்ளத்தில் உருண்ட பேருந்து, அலக்நந்தா ஆற்றில் பாய்ந்தது. பயங்கர சத்தம் கேட்டு அருகில் உள்ள கிராம மக்கள் ஓடிவந்தனர்.தகவல் அறிந்து மீட்புப் படையினரும் சம்பவ இடம் விரைந்தனர். 3 பக்தர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. அவர்களில் இருவர் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த வர் என்றும், மற்றெருவர் குஜராத்தை சேர்ந்தவர் என்றும் அடையாளம் காணப்பட்டது.
மேலும் 7 பக்தர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.அவர்களில் 4 பேர் பெண்கள். இன்னும் 10 பேரை காண வில்லை. அவர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அவர்களைத் தேடும்பணி நடைபெற்று வருகிறது.