கருநாடக மாநில கழக மேனாள் செயலாளர் சுயமரியாதைச் சுடரொளி ப.பாண்டியன் அவர்களின் வாழ்விணையரும்,ஒசூர் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் கோ.கண்மணியின் அன்புத் தாயாரும், ஒசூர் மாவட்ட கழக தலைவர் சு.வனவேந்தனின் மாமியாருமான கோ.இளஞ்சியம் வயது 81 திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து திருச்சி மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ் தலைமையில் மறைந்த அம்மையார் உடலுக்கு மாலை வைத்து வீரவணக்கம் செலுத்தினர்.
பின்னர் 24.06.25 மாலை 4.மணிக்கு அம்மையாரின் உடல் கொள்கை முழக்கமிட்டவாறு ஊர்வலமாக எடுத்துச் சென்று திருச்சி காவேரி ஆற்று கரையில் உள்ள ஓயாமாரி மின் மயானத்தில் எந்தவிதமான மூடசடங்குமின்றி எரியூட்டப்பட்டது.
இந் நிகழ்வில் திராவிட மகளிர் பாசறை மாநில துணைச் செயலாளர் அம்பிகா, மாவட்ட செயலாளர் மாமுனி, அதிமுக திருச்சி மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன், எடத்தெரு சந்திரன், மாவட்ட மகளிரணி பேபி, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் ஒசூர் மாவட்ட செயலாளர் மா.சின்னசாமி, திராவிட மாணவர் கழக மாவட்ட செயலாளர்
க.கா.சித்தாந்தன், சிதருஷ், தருன், திவாகர், வழக்குரைஞர் க.கா.வெற்றி, பொறியாளர் ரகுவர்மா, திருச்சி மாவட்ட மேனாள் செயலாளர் மோகன், திருவரங்கம் தோழர்கள் முருகன், பொன்னுசாமி,பாச்சூர் அசோகன், சோமரசன்பேட்டை ராஜசேகரன், திருவெறும்பூர் நகர் செயலாளர் சிவானந்தம் மற்றும் உறவினர்களும் நண்பர்களும் கலந்துகொண்டனர்.
கழகத்தின் துணை தலைவர் கவிஞர் பூங்குன்றன், மாநில ஒருங்கிணைப்பாளர்கள், இரா.ஜெயக்குமார், ஊமை ஜெயராமன், கருநாடக மாநில தலைவர் மு.ஜானகிராமன், செயலாளர் முல்லைகோ, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சிவகுமார் மற்றும் தமிழ்நாடு முழுவதும் இருந்து முகநூல் வழியாகவும் வாட்சப், அலைபேசி வாயிலாக மறைந்த அம்மையாரின் மகள் கண்மணி, மருமகன் வனவேந்தன் ஆகியோருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.