கணினி நினைவகத்தின் ஆற்றலை அதிகரிக்கும் புதிய வகை காந்தம்

1 Min Read

அமெரிக்காவின் எம்.அய்.டி. இயற்பியலாளர்கள், ‘பி-வேவ் காந்தம்’ என்ற புது தினுசான காந்தத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த வகை காந்தத்தை கணினி நினைவகச் சில்லுகளில் (Memory Chips) பயன்படுத்தினால், அவற்றின் செயல்பாட்டை பலமடங்கு வேகப்படுத்த முடியும்.

வழக்கமான காந்தங்களில், எலக்ட்ரான்களின் சுழற்சிகள் ஒரே திசையில் இருக்கும். ஆனால் நிக்கல் அயோடைடு படிகத்தால் ஆன பி–வேவ் காந்தத்தில், எலக்ட்ரான்களின் சுழற்சிகள் ஒரு சுழல் வடிவில் (Spiral Pattern) அமைந்துள்ளன.

எலக்ட்ரான்கள் இந்த வகையில் சுழல்வதில் மிகப்பெரிய நன்மை உண்டு. மிகமிக குறைவான மின்சாரத் துாண்டல் அல்லது ஒளிக்கதிர் பாய்ச்சல் மூலம், பி–வேவ் காந்தத்தின் காந்த ஆற்றலை உயர்த்தவோ, குறைக்கவோ முடியும்.

இந்த வகை காந்தத்தால் இயங்கும் நினைவுச் சில்லுகள் எளிதில் சூடாகாது என்பதோடு, இவற்றின் மின் நுகர்வும் மிகக் குறைவாகவே இருக்கும்.இது தற்போதைய தொழில்நுட்பத்தை விட அய்ந்து மடங்கு வரை மின்தேவைகளைக் குறைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைக்கு, பி-வேவ் காந்தம் மிகக் குளிர்ந்த -213 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலையில் மட்டுமே செயல்படுகிறது.

அறை வெப்பநிலையில் இயங்கக்கூடிய பி–வேவ் காந்தத்தை உருவாக்குவதே, அமெரிக்க எம்.அய்.டி., விஞ்ஞானிகளின் அடுத்தகட்ட இலக்கு. அது சாத்தியமானால், கணினி தொழில்நுட்பத்தில் இது ஒரு மாபெரும் பாய்ச்சலாக இருக்கும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *