விருதுநகர் மூன்றாவது சுயமரியாதை மகாநாடு தீர்மானங்கள்

viduthalai
2 Min Read

மதக்கண்டனம்

1 (a) மனிதத்தன்மையைத் தடைப்படுத்து வதற்கு மதங்களின் பேரால் ஏற்பட்டுள்ள பழக்க வழக்கங்களே காரணமாயிருப்பதால் அப்படிப்பட்ட எல்லா மதங்களும் மறைந்து போக வேண்டுமென்றும், மதங்கள் ஒழியும் வரை மனிதர்களுக்குள் சகோதரத்துவம் வளராதென்றும் இம்மகாநாடு அபிப்பிராயப்படுகிறது.

(b) இந்திய தேசத்தில் தோன்றியுள்ள மத வேற்றுமைகளும், பகைகளும் அழிய வேண்டுமானால் அறிவுள்ள இந்தியர்கள் முதலில் மதஉணர்ச்சியை புறக்கணிக்க வேண்டுமென்று தீர்மானிக்கிறது.

பிரேரேபித்தவர்: திருச்சி திரு. கே.எம். பாலசுப்ரமணியம் பி.ஏ.பிஎல்,

ஆமோதித்தவர்: டி.வி. சோமசுந்தரம் பி.ஏ.பி.எல்.,

காங்கிரஸ் காந்தி மத நடுநிலைமைக் கொள்கை கண்டனம்

  1. தற்கால லவுகீக முன்னேற்றத்திற்கு அனுகூலமாக சட்டசபைகளில் வரும் முக்கியமான சீர்திருத்தச்சட்டங்களை யெல்லாம் பிற்போக்கானவர்கள் மதத்தின் பேரால் ஆட்சே பிப்பதால், இம்மகாநாடு அரசாங்கத்தார் அனு சரித்து வரும் மதநடுநிலைமையை ஆதரிக்கும் எந்தஅரசியல் சமுதாயக் கட்சிகளையும் ஒப்புக் கொள்ள முடியாதென்றும், எதிர்கால இந்திய அரசியல் சீர்திருத்தத்தில் “மதநடுநிலைமை’’ என்னும் கொள்கை நீக்கப்பட வேண்டும் என்றும் வற்புறுத்துகின்றது.

பிரேரேபித்தவர்: எஸ்.ராமச்சந்திரன் பி.ஏ.பி.எல்.,

ஆமோதித்தவர்: ஈ.வெ.இராமசாமி

பார்ப்பனிய கண்டனம்

(ய) இந்திய சமுகத்தில் பிறவியின் காரணமாய் ஏற்படுத்தப்பட்டிருக்கும் வித்தியாசங்களுக்கும் ஏற்றதாழ்வுகளுக்கும் வருணாசிரம தருமக் கொள்கையே காரணம் என்று இம்மகாநாடு கருதுகின்ற மட்டில் வருணாசிரம தருமத்தை ஆதரிக்கும் எந்த இயக்கத்தையும் இம்மகாநாடு எதிர்க்கிறது.

(b) தீண்டாமை என்பது இந்து சமுகத்திலுள்ள சகல ஜாதிகளையும் பீடித்த நோயென்றும் தீண்டாமை ஒழியவேண்டுமானால் பிராமணியம் ஒழியவேண்டுமெனவும் இம்மகாநாடு தீர்மானிக் கிறது.

பிரேரேபித்தவர்: எஸ். இராமநாதன் எம்.ஏ.பி.எல்.,

ஆதரித்தவர்: டி.பி. சுப்ரமணியம், கஞ்சமலை

இந்தி கொள்கை கண்டனம்

4(a) வருணாசிரம கொள்கையை வெள்ளை ஜாதி பின்பற்றுவதால் தான் நிறபேத சண்டை உலகில் வலுத்து வருவதால், கலப்பு மணங்களாலும், அறிவு ஆராய்ச்சி துறைகளில் மக்கள் எல்லோரும் கலந்து ஒத்துழைப்பதின் மூலமும் எல்லாவித வித்தியாசங்களும் நீக்கப்படக்கூடும் என்றும் அதற்காக அன்னியபாஷைகளையும் கற்கவேண்டுமென்றும் இம்மகாநாடு கருதுகின்றது:

(b) தேசியத்தின் பெயரால் இந்தி பாஷையைக் கற்றாக வேண்டுமென்பது வருணாச்சிரமத்திற்கு ஆதரவு கொடுப்பதாய் இருப்பதால் இந்தி கொள்கையை கண்டிக்கின்றது.

பிரேரேபித்தவர்: எஸ். முருகப்பா.

ஆமோதித்தவர்:  சாமி சிவநேசன்.

கதர் கண்டனம்

  1. பொருளாதாரத் துறைக்கும், தொழில் அபிவிருத்திக்கும் இயந்திர வளர்ச்சிக்கும், சமதர்ம உணர்ச்சிக்கும் கதர் தத்துவம் விரோதமாய் இருப்பதால் கதர் தேசியப் பொருளாதாரத் தொழில் திட்டம் என்பதை இம்மகாநாடு மறுக்கின்றதுடன் தொழில் முறை இயந்திர வளர்ச்சியை இம்மகாநாடு ஆதரிக்கின்றது.

பிரேரேபித்தவர்: எஸ். இராமநாதன் எம்.ஏ.பி.எல்.,

ஆமோதித்தவர்: சாமிசிதம்பரனார்.

  1. நமது இயக்க வெளியீடாக “சண்டமாருதம்’’ என்ற தமிழ் தினசரிப் பத்திரிகை இம்மகாநாடு தினத்தில் வெளி வந்துள்ளதை நல்வரவு கூறி பெரிதும் பாராட்டுவதுடன் ஒவ்வொருவரும் சந்தாதாரராகச் சேர்ந்து போதிய ஆதரவு அளிக்க வேண்டுமாய் இம்மகாநாடு எல்லாப்பிரதி நிதிகளையும் கேட்டுக் கொள்ளுகிறது.

பிரேரேபித்தவர்: அ.பொன்னம்பலம்,

ஆமோதித்தவர்: டி.வி. சோமசுந்தரம் பி.ஏ.பி.எல்.,

(16.08.1931)

(தொடரும்)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *