திருநின்றவூர், ஜூன் 20- ஆவடி மாவட்டம் திருநின்றவூர் பகுதி திராவிடர் கழகம் சார்பில் கலந்துரையாடல் கூட்டம் 18.06.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு, பாலாஜி நகரில் உள்ள ஆவடி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கலைவேந்தன் இல்லத்தில் திருநின்றவூர் பகுதி தலைவர் அருண் தலை மையில் மாவட்ட தலைவர் கார்வேந்தன், மாவட்ட செயலாளர் இளவரசன், மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல் ஆகி யோர் முன்னிலையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக தலைமை கழக அமைப்பாளர் வி.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு கழக வளர்ச்சி மற்றும் செயல்பாடு குறித்து விளக்க உரையாற்றினார்.
நிகழ்வில் மாவட்ட துணை தலைவர் ரகுபதி, மாவட்ட துணை செயலாளர் பூவை தமிழ்ச்செல்வன், வேப்பம்பட்டு பகுதி தலைவர் சிவ.ரவிச்சந்திரன், செயலாளர் பட் டாளம் பன்னீர்செல்வம், மாவட்ட ப.க. துணைச்செயலாளர் கார்த்திகேயன், திரு நின்றவூர் நகர செயலாளர் கீதா இராமதுரை, இளைஞரணி செயலாளர் சிலம்பரசன், ஆவடி மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ராணி ரகுபதி மற்றும் பூவை லலிதா ஆகி யோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கூட்டத்தில் வைக்கம் நூற்றாண்டு மற்றும் கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு கூட்டம் நடத்துவது என்றும் விடுபட்ட பகுதிகளில் கழகக் கொடி மரங்கள் நிறுவவும் வாரந் தோறும் கழக குடும்பத்தினரை சந்தித்து கழக பணிகளை துரிதப்படுத்தவேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இறுதியில் தோழர் கலைவேந்தன் நன்றி கூற இனிதே நிறைவு பெற்றது.