சிறீவில்லிபுத்தூர், ஜூன் 26 விருதுநகர் மாவட்டம் சிறீவில்லிபுத்தூரில் இந்து சமய அறநிலையத் துறையின் பராமரிப்பில் உள்ள பெரிய மாரி யம்மன் கோயிலில் ஜூலை 2 ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 16 ஆம் தேதிமுகூர்த்தக்கால் நடப்பட்டு, குடமுழுக்குப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சமூக வலை தளங்களிலும் வைரலாகப் பரவியது
இக்கோயிலில் உதவி அர்ச்சக ராகப் பணி புரிபவர் கோமதிவிநாயகம் (30). இவரது வீட்டில், குடமுழுக்கு பணிக்கு வந்த அர்ச்சகர்கள் சிலர் தங்கியுள்ளனர். இவர்களில் சிலர் மது குடித்துவிட்டு வீட்டில் ஆபாசமாக நடனமாடியதாகக் கூறப்படுகிறது. இதை காட்சிப் பதிவு செய்த எடுத்த கோயில் மேனாள் அர்ச்சகர் ஹரிஹரன் மகன் சபரிநாதன், அதை அறநிலையத் துறை அதிகாரிகள், கோயில் நிர்வாகக் குழுவினருக்கு அனுப்பிவைத்து, புகார் தெரிவித்தார். இந்த காட்சிப் பதிவு சமூக வலை தளங்களிலும் வைரலாகப் பரவியது.
இதுதவிர, கோயில் வளாகத்தில் பணிபுரியும் பெண்கள் மீது விபூதி அடித்து அர்ச்சகர்கள் விளையாடும் காட்சிப் பதிவும் வெளியாகி உள்ளது. இதையடுத்து, தங்களை பற்றி அவதூறாக காட்சிப் பதிவு வெளியிட்டதாக சபரிநாதன் மீது காவல் நிலையத்தில் கோமதி விநாயகம் புகார் அளித்தார். அதேநேரம், ஆபாச நடனமாடிய அர்ச்சகர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தக்காரிடம் புகார் அளிக்கப்பட்டது.
மருத்துவப்
பரிசோதனை மூலம் உறுதியானது!
பரிசோதனை மூலம் உறுதியானது!
கடந்த 15 ஆம் தேதி பெரிய மாரி யம்மன் கோயில் அர்ச்சகர் சுந்தர் மது அருந்திவிட்டு பணியில் ஈடுபட்டதும் மருத்துவப் பரிசோதனை மூலம் உறுதியானது. மேலும், கோயில் அலுவலகத்தில் அறநிலையத் துறை ஊழியர் கார்த்திக், மது பாட்டிலுடன் இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் காட்சிபரவுகிறது. அர்ச்சகர்கள் மது போதையில் ஆபாச நடனமாடும் காட்சிப் பதிவு பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்ப டுத்தியது. இதையடுத்து, பெரிய மாரியம்மன் கோயில் தக்காரும், ஆண்டாள் கோயில்செயல் அலுவ லருமான சக்கரையம் மாள், செயல் அலுவலர் ஜோதிலட்சுமி ஆகியோர், சர்ச்சையில் சிக்கிய அர்ச்சகர்களிடம் நேற்று (25.6.2025) விசாரணை மேற்கொண்டனர்.
துறை ரீதியிலான விசாரணை!
இதுகுறித்து தக்கார் சக்கரை யம்மாள் மதி கூறும்போது, “உதவி அர்ச்சகர் கோமதிவிநாயகம் உள்ளிட்ட 4 பேரும் கோயிலில் இருந்து நீக்கப்பட்டு விட்டனர். அவர்கள் கோயில் பூஜைகளில் தலை யிட தடை விதிக்கப்பட் டுள்ளது. அர்ச்சகர் சுந்தர் மீது குடமுழுக்குக்குப் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும். துறை ரீதியிலான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது’’ என்றார்.