பெரியார் -அண்ணா -கலைஞர் – பேராசிரியர் மு.நாகநாதன்

2 Min Read

கவிதை

முருகன் போர்வையில்
சங்கிகள் மதுரையில் நடத்திய

ஸநாதன சதிக் கூட்டத்தில்
ஒரு காட்சி வைக்கப்பட்டதாம்!
பெரியார், அறிஞர் அண்ணா,
கலைஞர் ஆகியோரை நாத்திக
நரிகள் என்று அழைத்த‌னராம்!
குருதி கொட்ட மதவெறி சொட்ட அரிப்புகளைச் சொறிந்துகொண்டுள்ளது மதுரையில் கூடி ஓநாய்கள் கூட்டம்.
பெரியார் மூத்த ஆளுமை!
அறிஞர் அண்ணா
பெரியார் அளித்த பெரும் ஆளுமை!
கலைஞரோ இரு ஆளுமைகளின்
அடிச்சுவட்டில் அய்ந்து முறை

தமிழ்நாட்டில் ஆட்சிப் புரிந்த
உயர் ஆளுமை!
இதைத் தான்
பிறந்த நாள் காணும் கவிஞர்

கண்ணதாசன்வரிகள் சுட்டுகின்றன.
இவை கவிதை வரிகள் மட்டும் அல்ல –
வரலாற்றுப் பதிவுகள்!
மதுரையில் கூடிய மதவெறியர்களை
விரட்டும் ‘வார்த்தைக் கம்புகள்’!

பெரியார் யார் ?
ஊன்றிவரும் தடி சற்றுநடுங்கக் கூடும்
உள்ளத்தின் உரத்தினிலே
நடுக்கமில்லை
தோன்றவரும் வடிவினிலே நடுக்கம் தோன்றும்
துவளாத கொள்கையிலே
நடுக்கமில்லை.

 

நீதிமன்றின் நீதிக்கும்
நீதி சொல்வார்
தெறிகெட்டு வளைத்ததெல்லாம்
நிமிர்த்தி வைப்பார்
ஜாதி எனும் நாகத்தைத் தாக்கித்
தாக்கி
சாகடித்த பெருமை கைத்தடிக்கே
உண்டு
தாக்காத பழமையில்லை
தந்தை நெஞ்சில்
தழைக்காத புதுமையில்லை
தமிழ் நிலத்தில்!

அண்ணா யார்?
முல்லையில் மணமிருக்கும்
மொத்தமும் நிறைந்திருக்கும் -என்
அண்ணா
மொழிந்திடும் ஒரு வார்த்தையில்
பகைவரைச் சிரிக்க வைத்தார்

 

வகையொடும் நூல்கள் தந்தார்
என் அண்ணா
மனவளம் மிகவே கொண்டார்
நாட்டிற்கு ஒருவரிடி
நற்றமிழ் அறிஞரடி
கேட்டவர் அறிவாரடி
என் அண்ணா
கீழ்க் குணம் அறியாரடி

கலைஞர் யார்?
சதாவதானத்திறமை
நிதானப் புத்தி நேரிய பார்வை
நின்று கண்டறிந்து பெருவழி
செல்லல்
தன்னையறிந்து பிறர் உளம்
நோக்கல்
நதியென ஓடி நாளெல்லாம்
‌உழைத்தல்
அதிசயச் சொற்களின்
ஆய்வது கூர்மதி
அன்பர் நலத்திலும் அக்கறை
செலுத்துதல்
இலக்கண மென்றால்
இலக்கியம் அவரே!
கருணாநிதியின் தனித்தமிழ் அரசு
பல நாள் நிலைக்கப் பக்குவம்
பெற்றது
வாழிய நண்பர்
வாழிய அமைச்சர்
வாழிய கலைஞர்
வாழிய தமிழர்

கவிஞர் அடிக்கடி சொல்லும் சொல்
கவிஞன் வாக்குப் பலிக்கும் என்பது!
இது மூடநம்பிக்கையால் அல்ல
தமிழ்நாட்டின் நாடி  பிடித்து
பாடிய நல் நம்பிக்கை

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் ஆட்சி
நீட்சிப் பெற்று நிலைத்திருக்கும்

முருகன் வேடங்கள் களையட்டும்
ஸநாதனம் சாயட்டும்
திராவிடம் வெல்லட்டும்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *