ஜூலை 15-ஆம் தேதி தொடங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்ட விரிவாக்க பணிகள் குறித்து அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகி வருகின்றன. கடந்த முறை நிராகரிக்கப்பட்டவர்களும் இந்த முறை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆவணங்கள் சரியில்லாமல் நிராகரிக்கப்பட்டவர்கள், கடந்த சில மாதங்களில் திருமணமான பெண்களும் ரூ.1000 உரிமைத்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.