சென்னை, ஜூன் 25 இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய செயற்குழு உறுப்பினர் செ.நா.ஜனார்த்தனன் வெளியிட்ட அறிக்கை வருமாறு:
இந்தியா முழுவதும் 15 லட்சம் ஆசிரியர்களை உறுப்பினர்களாகக் கொண்ட இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய செயற்குழு கூட்டம் அகில இந்திய தலைவர் கே.சி.அரி கிருஷ்ணன் தலைமையில் டெல்லியில் ஜூன் 25, 26-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் தமிழகம், கேரளம் ஆந்திரம், தெலங்கானா, அரியானா ஒடிசா, மேற்கு வங்கம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 26 அமைப்புகளைச் சார்ந்த நிர்வாகிகள் உரையாற்றுகின்றனர்.
தேசிய ஓய்வூதியத் திட்டம், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றை ரத்து செய்துவிட்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து வகை ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், பி.எம். சிறீ திட்டத்தில் தமிழ்நாடுவ அரசு கையெழுத்திடாத காரணத்தினால் கடந்த கல்வி ஆண்டுக்கான ஒன்றிய அரசின் பங்களிப்புத்தொகை ரூ.2,152 கோடியை தமிழ்நாடு மாணவர் நலன் கருதி உடனடியாக விடுவிக்க வேண்டும்,
இந்தியா முழுவதும் காலியாக உள்ள பல லட்சம் ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக முறையான காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும், மாணவர் நலன்களுக்கு எதிராக உள்ளதால் தேசிய கல்விக்கொள்கை 2020-அய் ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட 8 தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ளன.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பொது கட்டட உரிமம் பெறுவதற்கான விதிகளில் திருத்தம்
தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை, ஜூன்.25- எளிமை ஆளுமை திட்டத்தின் கீழ் பொது கட்டடஉரிமத்தை எளிதாக பெறுவதற்கு விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள் ளது.
விதிகளில் திருத்தம்
தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
எளிமை ஆளுமை திட்டத் தின் கீழ் பொது கட்டட உரிமம், கட்டிடத்தின் உறுதித் தன்மை குறித்த சான்றிதழ் மற்றும் இந்த சான்றிதழ் வழங்க அனுமதிக்கப்பட்ட நியமனம் பெற்ற பொறியாளர்கள் குறித்த விவகாரங்களில் தமிழ்நாடு பொது கட்டட விதிகளில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு எளிமைப்படுத்தப்பட்டு உள்ளன.
பொது கட்டட உரிமம் பெறுவதற்கு பொதுப்பணித்துறையால் அங்கீகரிக்கப்பட்ட நியமனம் பெற்ற பொறியாளர்களிடம் இருந்து கட்டடத்தின் உறுதித்தன்மை குறித்த சான்று பெற்று அளிக்கப்பட வேண்டும்.
பொது கட்டடத்துக்கான உரிமத்தை இணைய வழியாக பெற்றுக்கொள்ளலாம். இதற்காக https://www.tnesevai.tn.gov. in/ என்ற இ-சேவை இணை யதளத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.
இணைய வழியாக உரிமம்
இணையதளத்தில் உள்நுழைந்தவுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின் பொது கட்டிடங்களுக்கான உரிமத்தை இணைய வழியாக பெற்றுக்கொள்ளலாம்.
கட்டட உறுதித்தன்மை சான்றிதழில் குறிப்பிட்டுள்ள காலம் வரை அக்கட்டடத் தின் பொது கட்டட உரிமம் செல்லுபடியாகும்.
எளிமை ஆளுமை திட்டம்
ஏற்கனவே விண்ணப்பித்து நிலுவையில் இருந்தால், இ சேவை இணையதளம் வழியாக மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். பொது கட்டிடங்களுக்கான உரிமத்தின் காலம் முடியும் தருவாயில் இருந்தால் இ-சேவை இணையதளம் மூலம் புதுப்பித்துக் கொள்ளலாம். அதேபோன்று எளிமை ஆளுமை திட்டத்தின் கீழ் சுகாதார சான்றிதழ் பெறுவதற்கான நடைமுறையும் தற்போது எளிமைபடுத்தப்பட்டு உள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் சுகாதார சான்றிதழ் வழங்கும் தற்போதைய நடைமுறை மாற்றப்பட்டு, சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் அரசாணையில் குறிப்பிட்டுள்ள நடைமுறைகளை பின்பற்றி இ–-சேவை இணையதளம் வாயிலாக சுயசான்றளிப்பின் அடிப்படையில் சுகாதார சான்றிதழை பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஜாதி மறுப்புத் திருமணம்:
பெண்களுக்கு 8 கிராம் தங்கம், ரூ.50,000
ஜாதி மறுப்புத் திருமணத்தை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு ஜாதி மறுப்பு திருமண நிதியுதவி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் பட்டப்படிப்பு படிக்காத பெண் களுக்கு 8 கிராம் தங்கம், ரூ.25,000 நிதியுதவி அளிக்கப்படுகிறது. பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு 8 கிராம் தங்கத்துடன் ரூ.50,000 உதவித் தொகை அளிக்கப்படுகிறது. இதற்கு அருகிலுள்ள இ-சேவை மய்யத்தில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.