முத்தமிழறிஞரின் (பிறந்த நாள்) செம்மொழி நாள் விழாவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார். உடன்: சிறப்பு விருந்தினர்கள் அமைச்சர் பி.கே. சேகர்பாபு, கு. ஞானசம்பந்தம், கவிஞர் சினேகன் மற்றும் தி.மு.க. முன்னணி பொறுப்பாளர்கள் உள்ளனர். (வில்லிவாக்கம் – 25.6.2025)
ஆசிரியர் அய்யா அவர்களுடன் அமர்ந்திருக்கும்போது பெரியாரின் பக்கத்தில் அமர்ந்திருப்பதுபோல் இருக்கிறது முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பாடம் கற்ற இடம் எது தெரியுமா? பெரியாரிடம்!! அதனுடைய தொடர்ச்சியாகத்தான் அய்யா (திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி) இங்கே அமர்ந்திருக்கின்றார். எங்களுக்கெல்லாம் பெருமையாக இருக்கின்றது. பெரியாரின் பக்கத்தில் உட்கார்ந்திருப்பது போலவே இருக்கின்றது. எவ்வளவு போராட்டங்கள்; எவ்வளவு விமர்சனங்கள்; எவ்வளவு அவமானங்கள்; ஆயிரம் அவமானங்களும் தன்மீது விழுந்தாலும் எல்லாவற்றையும் இந்த மக்களுக்காக; பொதுவாழ்வுக்காக துறந்துவிட்டு தான் கொண்ட கொள்கைக்காக நிமிர்ந்த நன்நடையும், நேர்கொண்ட பார்வையாக, நிலத்தில் எவற்கும் அஞ்சாத தன்மையைப் போல பாரதியாரின் வரிகளுக்கேற்ப வாழ்ந்து கொண்டிருக்கிற ஒரு மிகப்பெரிய ஆளுமை மிக்க ஆசிரியர் கி. வீரமணிஅவர்கள் இருக்கும் மேடையில் அமர்ந்திருக்கிறோம் என்ற இறுமாப்பு எழுகிறது நண்பர்களே! – வில்லிவாக்கம் பொதுக்கூட்டத்தில் கவிஞர் சிநேகன், 24.06.2025