‘வானத்தைப் பார்க்காதே, கடவுள் நம்மைக் காப்பாற்ற வரமாட்டார், நாம் உலகின் முதலிடத்தில் உள்ள அணி. அதை மனதில் வைத்து விளையாடுவோம்’ என்று 2013 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் 130 ரன்களை Defend செய்வதற்கு முன்பு அணியிடம் கேப்டன் தோனி கூறிய வார்த்தைகள் இவை. பரபரப்பான போட்டியில் எம்.எஸ். தோனியின் சமயோசித அறிவால் வெற்றி கிட்டிய நாளே இன்று. இந்த கோப்பையை பெற்றதன் மூலம் 3 அய்.சி.சி. டிராபிகளையும் வென்ற இந்திய கேப்டனாக மாறினார் தோனி.