சென்னை, நவ. 12- ஃபெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல் கடுமையான கருத்துக்கள் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆதரவை விலக்கிக் கொண்டதைத் தொடர்ந்து அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியில் முடிந்தது.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ.83.34ஆக இருந்தது. ப்ளூம்பெர்க் தரவு களின்படி, இது 9.11.2023 அன்று ரூ.83.29ஆக முடிவடைந்தது.
இன்ட்ராடேயில், இது 21 பைசா குறைந்து, அமெரிக்க டாலருக்கு எதிராக இதுவரை இல்லாத அளவு ரூ.83.50அய் எட்டியது. செப்டம்பர் 5ஆம் தேதி 35 பைசா சரிந்ததிலிருந்து ஒரே நாளில் ஏற்பட்ட மிகக் கடுமையான சரிவு இதுவேயாகும்.