திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கல்லூரியின் வேதியியல் துறையில் காலியாக புராஜெக்ட் அசோசியேட் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Project Associate I
காலியிடம்: 1
ஊதியம்: முதல் ஆண்டு மாதம் ரூ.25,000, இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு மாதம் ரூ.28,000
வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு அரசு விதி முறைப்படி சலுகைகள் வழங்கப்படும்.
தகுதி: வேதியியல்,வேதியியல் அறிவியல் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வு பற்றிய விவரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
நேர்முகத் தேர்விற்கு வரும்போது அனைத்து அசல் சான்றுகளையும் கொண்டு வர வேண்டும். பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு 3 ஆண்டு பணி வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.nitt.edu இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களை இணைத்து 30.6.2025 தேதிக்கு முன் பிடிஎப் ஆக மாற்றி [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக அனுப்பவும்.