தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனத்தில் மேலாளர் பணி

viduthalai
2 Min Read

தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனத்தில் உள்ள 3 பதவி களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. துறை சார்ந்த பிரிவுகளில் கல்வித்தகுதி பெற்றுள்ளவர்கள் இந்த வாய்ப்பிற்கு உடனே விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம், அரசின் முக்கிய நிறுவனமாகும். தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் (TNCCM), பசுமை தமிழ்நாடு இயக்கம் (GTNM), தமிழ்நாடு ஈரநில இயக்கம் (TNWM) மற்றும் தமிழ்நாடு கடலோர மறுசீரமைப்பு இயக்கம் (TN SHORE) ஆகிய திட்டங்கள் இந்நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப் பட்டு வருகிறது.

பணியின் விவரங்கள்: உள்கட்டமைப்பு நிபுணர் மேலாளர்  1, சுற்றுச்சூழல் திட்ட மிடுபவர் துணை மேலாளர்  1, சமூக சிறப்பு மேலாளர்   1,  மொத்தம்  3.

வயது வரம்பு: இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் 01.06.2025 தேதியின்படி, அதிகபடியாக 45 வயது வரை இருக்கலாம்.

கல்வித் தகுதி: உள்கட்டமைப்பு நிபுணர் மேலாளர் பதவிக்கு சிவில் பொறியியல் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும், சுற்றுச்சூழல் பொறியியல்/ பொது சுகாதார பொறியியல் ஆகியவற்றில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இப்பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 8 ஆண்டுகள் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

துணை மேலாளர் பதவிக்கு சுற்றுச்சூழல் திட்டமிடல், சுற்றுச்சூழல் பொறியியல் மெரைன் அறிவியல் அல்லது கடல்சார் பொறியியல் ஆகிய வற்றில் முதுகலை பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சமூக சிறப்பு மேலாளர் பதவிக்கு சமூகவியல்/ சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் முதுகலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும், குறைந்தபட்சம் 8 ஆண்டுகள் அனுபவம் தேவை.

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு கணினி இயக்கும் திறன் இருக்க வேண்டும். அடிப்படை கணினி உபகரணங்கள் உபயோகிப்பதில் அனுபவம் தேவை.

ஊதிய விவரம்: உள்கட்டமைப்பு நிபுணர் மேலாளர் பதவிக்கு மாதம் ரூ.85,000 தொகுப்பூதியமாக வழங்கப்படும்.

துணை மேலாளர் பதவிக்கு மாதம் ரூ.75,000 தொகுப்பூதியமாக வழங்கப்படும்.

சமூக சிறப்பு மேலாளர் பதவிக்கு மாதம் ரூ.85,000 தொகுப்பூதியமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: இப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் 2 ஆண்டுகள் பணி நியமனம் செய்யப்படுவார்கள். தேவையின் அடிப்படையில் பணி காலம் நீட்டிக்கப்படலாம். தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு தகுதியில் அடிப்படையில் நேர்காணல் நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை: தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனத்தில் உள்ள இப்பணியிடங்களுக்கு ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் https://tngreencompany.com/careers என்ற இணையதளத்தில் நேரடியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 02.07.2025.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *