கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 25.6.2025

viduthalai
1 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* ஹிந்து முன்னணி நடத்திய முருகன் மாநாட்டில், தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரை இழிவுபடுத்தி வெளியிடப்பட்ட காணொலி: பாஜக, அதிமுக மீது விமர்சனத்தை எழுப்பும் திமுக.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* நீதிபதி வர்மா வீட்டில் பணம் பறிமுதல் செய்தது குறித்து எஃப்அய்ஆர் பதிவு செய்யாதது ஏன்..? நாடாளுமன்ற குழு கேள்வி.

* மகாராட்டிரா தேர்தல் மோசடி குற்றச்சாட்டு: பிரச்சினைகள் குறித்து விவாதிக்க ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* மதுரையில் நடைபெற்ற ஹிந்து முன்னணியின் முருகன் மாநாட்டில் பங்கேற்ற அதிமுக தலைவர்கள். தந்தை பெரியார், அண்ணா குறித்த  காணொலியால் அதிமுகவுக்கு சிக்கல்.

தி டெலிகிராப்:

* ‘2024 மக்களவை தேர்தலுக்கும் மகாராட்டிரா சட்டப்பேரவை தேர்தலுக்கும் இடையே வெறும் 5 மாதங்களில், மகாராட்டிரா முதலமைச்சரின் சொந்த தொகுதியில் (நாக்பூர் தென்மேற்கு) 8% வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். சில வாக்குச்சாவடிகளில் 2050% வாக்காளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தெரியாத நபர்கள் வாக்களித்ததாக பூத் முகவர்கள் தெரிவித்தனர் என ராகுல் குற்றச்சாட்டு.

தி இந்து:

* ஜூலை 1 முதல் ரயில் கட்டணத்தை  உயர்த்த ரயில்வே பரிசீலனை

* மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு பதவி உயர்வில் 4% இட ஒதுக்கீடு, தமிழ்நாடு அரசாணை வெளியிட்டது.

குடந்தை கருணா

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *