கிருட்டினகிரி ஜூன் 25 கிருட்டினகிரி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 21/06/2025 சனிக்கிழமை காலை 11.30 மணியளவில் மத்தூர் சி. வெங்கடாசலம் (மாவட்ட தொழிலாளரணி தலைவர்) இல்ல மாடியில் மிகுந்த எழுச்சியுடன் சிறப்பாக நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு கிருட்டினகிரி மாவட்ட கழகத் தலைவர் கோ. திராவிடமணி தலைமை வகித்துப் பேசினார். மாவட்ட கழகச் செயலாளர் செ.பொன்முடி அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
கூட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் வ. ஆறுமுகம், மாவட்ட துணைச் செயலாளர் சி.சீனிவாசன், மாவட்ட தொழிலாளரணி தலைவர் சி.வெங்கடாசலம், மாவட்ட ப.க.தலைவர் ச.கிருட்டினன், மாவட்ட ப.க.செயலாளர் க.வெங்கடேசன், பொதுக்குழு உறுப்பினர் கி.முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிறைவாக திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை. ஜெயராமன் பெரியார் உலகம் நிதி திரட்டுவது விடுதலை சந்தா சேர்ப்பது மற்றும் தமிழர் தலைவர் ஆசிரியர் கிருட்டினகிரி மாவட்டம் மத்தூர் வருகைக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்தும் கழக ஆக்கப் பணிகள் குறித்தும் விரிவாக எடுத்துக் கூறி சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் மாநில பகுத்தறிவாளர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் அண்ணா சரவணன், கழகக் காப்பாளர் பழ.பிரபு, மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி ஆகியோர் கருத்துரையாற்றினர்.
கூட்டத்தில் மாவட்ட தொழிலாளரணி தலைவர் சி.வெங்கடாசலம், மாவட்ட இளைஞரணி தலைவர் சீனிமுத்து. இராசேசன், மாவட்ட இளைஞரணி செயலாளர் நா.சிலம்பரசன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ச.கிருட்டினன், மாவட்ட ப.க.செயலாளர் க.வெங்கடேசன், மாவட்ட ப.க.துணைச் செயலாளர் மா.சிவசங்கர், ஊற்றங்கரை ஒன்றியத் தலைவர் அண்ணா அப்பாசாமி, மத்தூர் ஒன்றியத் தலைவர் சா.தனஞ்செயன், மாவட்ட மகளிரணி தலைவர் முருகம்மாள், மாவட்ட மகளிரணி செயலாளர் உண்ணாமலை, மத்தூர் ஒன்றிய இளைஞரணி சே.ராமஜெயம், மகளிரணி வெ.செல்வி, பொடார் பு.கணேசன், இர. நிலவன், வெ.தரணி, வெ. செம்மொழி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். இறுதியில் மத்தூர் ஒன்றியத் தலைவர் சா.தனஞ்செயன் நன்றி கூறினார்.
தீர்மானங்கள்
04/07/2025இல் கிருட்டினகிரி மாவட்டம் மத்தூர் கலைமகள் கலாலயா பள்ளியின் தாளாரும் பெரியார் கொள்கை சிந்தனையாளருமான மேனாள் தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குநர் சுயமரியாதைச் சுடரொளி சிந்தை மு.இராசேந்திரன் அவர்களின் நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்வில் தலைமையேற்று நினைவேந்தல் புகழுரை யாற்ற வருகைத் தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு கிருட்டினகிரி மாவட்ட சார்பில் சிறப்பான வரவேற்பு அளிப்பது எனவும் தீர்மானிக்கப்படுகிறது.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பெரு முயற்சியான திருச்சி சிறுகனூர் பெரியார் உலகம் பெரும்பணிக்கு அனைத்து தரப்பு பொதுமக்களையும் அணுகி நிதி வசூல் செய்வது எனவும்,
உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடு “விடுதலை” நாளிதழுக்கு அதிக அளவில் சந்தாக்களை திரட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்குவது எனவும் தீர்மானிக்கப்படுகிறது.