மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் பல்வேறு புதிய கட்டமைப்புகள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

viduthalai
3 Min Read

வேலூர், ஜூன் 25–- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (25.06.2025) வேலூர் பென்ட்லேண்ட் அரசு பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துமனையை திறந்து வைக்கவுள்ளதை முன்னிட்டு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் நேற்று (24.06.2025) பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின்போது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்ததாவது:–

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் பல்வேறு புதிய மருத்துவ கட்டமைப்புகள் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டு இருக்கிறது.

208 மருத்துவமனைகள்

208 மருத்துவமனைகள் இன்றைக்கு பணி முடிந்து இருக்கிறது. அதேபோல் ஒரு நீண்ட கால இடைவெளிக்கு பிறகு தமிழ்நாட்டில் 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் முழுமையாக கட்டப்பட்டு அதற்கு பணி நியமனங்களும் முடிவுற்று இந்த இரண்டு மருத்துவ அமைப்புகளும் ஏறத்தாழ 258 மருத்துவமனைகள் வருகிற ஜூலை 3ஆம் தேதி சென்னை வேளச்சேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அடையாறு சாஸ்திரி மூன்றாவது தெருவில் கட்டப்பட்டிருக்கிற மருத்துவமனையை நாட்டின் முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்து, அங்கிருந்து காணொலி காட்சி வாயிலாக தமிழ்நாடு முழுவதும் உள்ள 258 மருத்துவமனைகளை திறந்து வைக்க உள்ளார்கள்.

இப்படி பல்வேறு மருத்துவ கட்டமைப்புகள் தொடர்ந்து தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டு வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்னால் முதலமைச்சரின் வழிகாட்டுதலோடு இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் 4 1/2 லட்சம் சதுர அடி பரப்பில் ஒரு குழந்தைகளுக்கான பிரத்யேக மருத்துவமனை 20 சிறப்பு துறைகளுடன் கூடிய ஒரு சிறப்பு மருத்துவமனை உலகின் எந்த நாட்டிலும் இல்லாத ஒன்று. குழந்தைகளுக்கான பிரத்யேகக மருத்துவமனைக்கு முதலமைச்சர் அனுமதி தந்து தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் நிதி ஆதாரத்தோடு அந்த மருத்துவமனை கட்டுவதற்குரிய இடம் தேர்வு செய்யப்பட்டு ஒப்பந்தங்கள் போடப்படும் நிலைக்கு வந்திருக்கிறது. வருகிற செப்டம்பரில் பணி தொடங்கப்படும் நிலையும் உருவாகி இருக்கிறது. தமிழ்நாட்டுக்கு மட்டு மல்ல உலகத்திற்கே பெரிய அளவில் ஒரு மிகப்பெரிய மருத்துவ மய்யமாக குழந்தைகளுக்கான மருத்துவ மய்யமாக சைதாப்பேட்டையில் அமையவிருக்கிறது.

மருத்துவ கட்டமைப்புகள்

இதேபோல் ஏராளமான மருத்துவ கட்டமைப்புகள் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளாக தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஏற்கனவே இந்த அரசு பொறுப்பேற்கும் போது மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் 19 இடங்களில் மட்டுமே இருந்தது. இன்றைக்கு புதிதாக 19 இடங்களில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளுக்கு இணையாக 6 இடங்கள் என்று 25 மருத்துவமனைகளை கட்டுவதற்கு திட்ட மிட்டு 1018 கோடி ரூபாய் நிதி ஆதாரத்தையும் தந்து, அந்த பணிகள் எல்லாம் தற்போது முழுமையாக நிறைவேறும் நிலையில் இருக்கிறது.

கிருமி நீக்க சேவைகள்

கட்டட பணிகளைப் பொறுத்தவரை 100% முழுமையாக நிறைவு பெற்று இருக்கிறது. இதில் 560 படுக்கைகள் வரவிருக்கிறது. 11 அறுவை சிகிச்சைகள் அரங்கங்கள் உள்ளது. தரை தளத்தைப் பொறுத்தவரை வரவேற்பு, புறநோயாளிகள் பதிவு மய்யம், பிரசவ அறை, மகப்பேறு அவசர சிகிச்சைபிரிவு, அவசர சிகிச்சை அறுவையரங்கம், மருந்தகம், மத்திய கிருமி நீக்க சேவைகள் துறை மற்றும் சலவை துணி தொகுதி என்று பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் தரைத்தளம். அதேபோல் ஒவ்வொரு தளத்திலும் முதல் தளத்தில், இரண்டாவது தளத்தில், மூன்றாவது தளத்தில் என்று பல்வேறு சிறப்பு வசதிகள் கொண்ட கட்டமைப்புகளுக்கான பணிகள் முடிவுற்றி ருக்கிறது. 7 ஆம் தளத்தை பொறுத்தவரை ஒரு அறுவை அரங்கம், 10 அறுவை அரங்குகள் ஒரே தளத்தில் வரவிருக்கிறது. அதில் மூன்றுக்கு உபகரணங்கள் எல்லாம் பொருத்த ப்பட்டு இருக்கிறது. இன்னமும் 7 அறுவை அரங்குகளுக்கு தேவையான உபகரண மருத்துவ உபகரணங்கள் படிப்படியாகபொருத்தப்படவிருக்கிறது. இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் குறிப்பிட்டார்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *