டெங்கு, சிக்குன்குனியாவுக்கு விரைவில் தடுப்பூசி தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. டில்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய உயிரி தொழில்நுட்பத் துறை செயலர் ராஜேஷ் சுதிர், டெங்கு தடுப்பூசிக்கான முதற்கட்ட சோதனை வெற்றிகரமாக நடந்துள்ளதாக கூறியுள்ளார்.
சிக்குன் குனியா தடுப்பூசியின் 2-ம் கட்ட சோதனையும் முடிந்திருப்பதாக கூறினார். அடுத்த 2 ஆண்டுகளில் அவை சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெங்கு, சிக்குன்குனியாவுக்கு விரைவில் தடுப்பூசி..!

Leave a Comment