சென்னை, ஜூன் 20 – மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு மின்வாரிய அலுவலர்களுக்கு அமைச்சர் தங்கம் தென் னரசு அறிவுறுத்தினார்.
மின்துறை அமைச்சராகப் பொறுப்பேற் றுள்ள தங்கம் தென்னரசு, சென்னை அண்ணா சாலையில் உள்ள மின் வாரிய தலைமை அலுவல கத்தில், அனைத்து தலைமைப் பொறியாளர்களு டன் முதல் ஆய்வுக் கூட் டத்தை நேற்று (19.6.2023) நடத்தினார்.
இக்கூட்டத்தில், மின் தேவை, அனல், புனல் மற்றும் எரிவாயு மின்னுற் பத்தி நிலையங்களின் மூல மாக உற்பத்தி செய்யப் படும் மொத்த மின்சாரத் தின் அளவு குறித்தும், நடைபெற்று வரும் மின் னுற்பத்தி திட்டங்கள் மற்றும் மின்தொடர மைப்புத் திட்டங்கள் பற்றியும் ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு தேவையான அனைத்து நடவ டிக்கைகளையும் எடுக்கு மாறு அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.
பருவமழைக் காலத்தில் மின்துறை சார்பாக எடுக்கப்பட வேண்டிய முன்னெச் சரிக்கை நடவடிக் கைகள் மற்றும் சீரான மின் விநியோகம் குறித்து உரிய நடவடிக்கை மேற் கொள்ளுமாறு மண்டல தலைமைப் பொறியாளர்களை கேட்டுக் கொண்டார். மின்நுகர்வோரின் குறைகளை உடனுக்குடன் சரி செய்யவும் அறி வுறுத்தினார்.