சென்னை, ஜூன் 23- சென்னை லயோலா கல்லூரியில் உதவிப் பேராசிரியராக திருநங்கை ஜென்சி நியமனம் செய்யப்பட்டு உள் ளார். அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
திருநங்கை ஜென்சி
திருவள்ளூர் மாவட்டம் ஆர். கே.பேட்டை புதூரை சேர்ந்தவர் ஜென்சி. 2ஆம் வகுப்பு படிக்கும் போது, தான் ஒரு திருநங்கை என்பதை உணர்ந்த அவர், தொடர்ந்து பள்ளிப்படிப்பை முடித்தார். பள்ளிப்படிப்பை நிறைவு செய்யும்போது, திருநங்கைகள் படும் துயரங்களை உணர்ந்த ஜென்சி, எப்படியாவது ஆராய்ச்சிப் படிப்பை முடித்து பேராசிரியராக வலம் வரவேண்டும் என்று முடிவு செய்துள்ளார்.
அதன்படி, பி.ஏ எம்.ஏ.,எம்.பில். ஆங்கிலத்தில் உயர்கல்வியை முடித்த கையோடு, லயோலா கல்லூரி ஆங்கிலத்துறை தலைவர் மேரி வித்யா பொற்செல்வி வழிகாட்டுதலில் ஆராய்ச்சிப் படிப்பையும் நிறைவு செய்திருக்கிறார். உயர் கல்வி படிப்புகளை தன்னுடைய சொந்த முயற்சியிலேயேதான் ஜென்சி முடித்து உள்ளார்.
லட்சியத்தில் வெற்றி
அகில இந்திய வானொலி, கல்லூரியில் பணி புரிந்தும், சென்னை புத்தக மய்யத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளராக என இருந்தும், மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் எடுத்தும் அதன் மூலம் வருமானம் ஈட்டி, தன்னுடைய கல்விக்கனவை நிறைவேற்றி இருக்கிறார்.
கல்விக் கனவை நிறைவேற்றிய தோடு மட்டுமல்லாமல், ஆராய்ச்சிப் படிப்பை முடித்த லயோலா கல்லூரியிலேயே உதவிப் பேராசிரிய ராகவும் தற்போது பணியில் சேர்ந்து, பள்ளிப் படிப்பின் போது திருநங்கை ஜென்சி, தான் நினைத்த லட்சியத்திலும் வெற்றி பெற்று விட்டார்.
முதலமைச்சர் வாழ்த்து
அவருடைய இந்த வெற்றிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தள பதிவில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-
வாழ்த்துகள் ஜென்சி. உங்களது உழைப்பின் ஒளியால் இன்னும் பல நூறு பேர் கல்விக்கரை சேரட்டும். தடைகளையும் புறக்கணிப்புகளையும் – கல்வி எனும் பேராற்றலால் – வெல்லட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கோரிக்கை
வாழ்த்து தெரிவித்த முதலமைச் சருக்கு திருநங்கை ஜென்சியும் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருநங்கை ஜென்சியிடம் பேசியபோது இந்தியாவிலேயே ஆராய்ச்சிப் படிப்பை முடித்த முதல் திருநங்கையான என்னை முதலமைச்சர் வாழ்த்தியது எனக்கு பெரிய மகுடம். திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் ‘அப்பா’விடம் நான் ஒரு கோரிக்கை வைக்க விரும்புகிறேன் .
எனக்கு பெரிய மகுடம். திராவிட மாடல் ஆட்சி நடத்தி அரசுக் கல்லூரியில் எனக்கு ஒருநிரந்தர பணியிடம் ஒதுக்கிக் கொடுத்தால்,என்னை போல் வாழ்க்கையில் சாதிக்கத் துடிக்கும் திருநங்கைகளுக்கும் அது ஒரு முன்னெடுப்பாக இருக்கும். துன்பங்களைத் தாண்டி சாதிக்கும்போது, நம்முடைய திறமைகளுக்கு கிடைக்கும் பாராட்டுகள் அந்த துன்பங்களுக் கெல்லாம் மருந்தாக மாறுகிறது’ என்றார்.