சாமி சிலை மீது ரூபாய் நோட்டு மழை பக்தர் மீது காவல்துறையில் புகார்

1 Min Read

அரசியல்

கேதார்நாத், ஜூன் 20 – கேதார்நாத் கோயிலில் உள்ள சிவலிங்கம் மீது ஒரு பெண் ரூபாய் நோட்டுகளை தூவுவது போன்ற காட்சிப்பதிவு வைரலாகி வருகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு கோயில் நிர்வாகம் சார்பில் காவல் துறையில் புகார் செய்யப் பட்டுள்ளது.

உத்தராகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டம் கேதார்நாத் தில் சிவன் கோயில் உள்ளது. இந்தக் கோயில் ஏப்ரல் முதல் 6 மாதங்களுக்கு மட்டுமே திறந்திருக்கும். அந்த வகையில் இப்போது கோயில் திறந்திருப்பதால் பக்தர்கள் நடைப்பயணம் மேற்கொண்டு வருகின்ற னர். இந்தக் கோயிலில் ஒளிப்படம் எடுக்கவும், காட்சிப்பதிவு செய்யவும் தடை விதிக்கப்பட்டுள் ளது.

இந்நிலையில், கேதார் நாத் கோயில் கருவறை யில் உள்ள சிவலிங்கம் மீது ஒரு பெண் ரூபாய் நோட்டுகளை தூவுகின்ற காட்சிப்பதிவு சமூக வலைதளங்களில் வைர லாகி வருகிறது. அந்தப் பெண் யார் என தெரிய வில்லை.

இதுகுறித்து கோயிலை நிர்வகிக்கும் பத்ரிநாத்-கேதார்நாத் கோயில் குழு வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது:

சிவலிங்கத்தின் மீது ரூபாய் நோட்டுகள் தூவு வது போன்ற காட்சிப் பதிவு வெளியாகி உள் ளது. இது கண்டிக்கத்தக் கது. இது தொடர்பாக கோயில் தலைவர் அஜேந் திர அஜய் காவல் துறை யில் புகார் செய்துள்ளார்.

மேலும் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை கண்காணிப்பாள ருடன் அஜய் தொலைப் பேசியில் தொடர்பு கொண்டு இதுபற்றி பேசி உள்ளார்.

அப்போது, ரூபாய் நோட்டுகளை சிவலிங் கம் மீது தூவியவர் மீது கடும் நடவடிக்கை எடுக் குமாறு கேட்டுக் கொண் டுள்ளார். 

-இவ்வாறு கேதார்நாத் கோயில் குழு தெரிவித்து உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *