நேற்று (22.6.2025) சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில், ‘‘96 ஆம் ஆண்டில் பெரியார் பதிப்பகங்கள்’’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி முன்னிலையில், ‘‘தந்தை பெரியாரின் புத்தகப் புரட்சி’’ புத்தகத்தினை, ‘நியூ செஞ்சுரி புக் அவுஸ்’ இயக்குநர்களில் ஒருவரான தோழர் இரா.முத்தரசன் வெளியிட, மலேசிய நாட்டின், பேராக் மாநில திராவிடர் கழக செயலாளர் இரா.கோபி பெற்றுக் கொண்டார். உடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொருளாளர் வீ.குமரேசன், எழுத்தாளர் ஞா.சிவகாமி ஆகியோர் உள்ளனர்.