கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 23.6.2025

viduthalai
1 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* திமுக கூட்டணியில் தொடர்வோம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி தொடர வேண்டும்: ஈரோட்டில் நடைபெற்ற மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்.

* ஈரான் மீது போர் தொடுப்பது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தன்னிச்சையாக முடிவு எடுக்கக் கூடாது; மக்களிடம் விளக்கம் அளிக்க வேண்டும், என அமெரிக்க செனட்டர் சக் ஸ்கூமர் பேச்சு.

தி இந்து:

* “கட்சி மாநாட்டிற்கு எந்த கடவுளின் பெயரையும் பயன்படுத்துவது எந்த தெய்வமாக இருந்தாலும் சரி, பொருத்தமற்றது” ஈரோட்டில் நடைபெற்ற மதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் வைகோ பேட்டி. “இந்த [நிகழ்வு] தமிழ்நாட்டில் இந்து வாக்கு வங்கியை ஒருங்கிணைக்க உதவாது” என்றும் திட்டவட்டம்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* 3,634 மாற்றுத்திறனாளிகள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் நியமிக்கப்படுவார்கள்; விண்ணப்ப செயல்முறை ஜூலை 1 ஆம் தேதி தொடங்கும்: புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தை திறந்து வைத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு.

தி டெலிகிராப்:

* ஆளுநரின் ஆர்.எஸ்.எஸ். கோட்பாடு, கேரளாவில் ஆர்ப்பாட்டங்கள்: ஆர்.எஸ்.எஸ். ஷாகாக்களில் காணப்படும் காவிக் கொடியை ஏந்திய பாரத மாதாவின் உருவப்படத்தை அகற்ற மாட்டேன் என்று ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் அடாவடித்தனத்தை எதிர்த்து, கேரளாவில் மாணவர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* இதுதான் குஜராத் மாடல்? ஹிந்து பகுதியில் முஸ்லிம் வர்த்தகர் கடைகளை அணுகுவதை உறுதி செய்யுங்கள்: குஜராத் அரசுக்கு உயர்நீதிமன்றம் ஆணை. தனது சட்டப்பூர்வ சொந்தமான கடையில் வணிகம் செய்வதில் முஸ்லிம் வர்த்தகர் எதிர்கொள்ளும் சிக்கலைத் தீர்க்க அதிகாரிகளுக்கு உத்தரவு.

குடந்தை கருணா

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *