கழகச் செய்திகள்

1 Min Read

• தாராபுரம் கழகம் மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் துங்காவியில் 22.06.2025 அன்று மாலை7:30 மணிக்கு தெருமுனை கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது தலைமைக் கழகப் பேச்சாளர் அருண்குமார் சிறப்புரை ஆற்றினார்.
• 22.06.2025 இன்று மாலை 6..00மணிக்கு தாராபுரம் கழக மாவட்டம் குடிமங்கலம் ஒன்றியம் பெதப்பம்பட்டியில் மிகச் சிறப்பாக தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.
• திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் புகுந்து ரகளையில் ஈடுபட்ட இந்து முன்னணி அமைப்பைச் சார்ந்தவர்கள் தாக்கியதில் காயம் அடைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தோழர் சரத்குமாரை திண்டுக்கல் மாவட்ட கழக தலைவர் இரா.வீரபாண்டியன், மாவட்ட துணைத்தலைவர் த.கருணாநிதி, மாநகரச் செயலாளர் செல்வம், இரா. ஜவகர் ஆகியோரை திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினர்.
• பள்ளிகுழந்தைகளுக்கு நோட்டுக்கள் வழங்கினார் மதுரை மாவட்ட காப்பாளர் சே.முனியசாமி..அவர்கள்
• திருவாரூரில் திராவிட மாணவர் கழக உறுப்பினர் சேர்க்கைக்கான Join DSF என்ற சுவரொட்டிகளை திரு.வி.க. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தமிழ்நாடு மத்தியப் பல்கலைக் கழகம், இராபியம்மாள் அகமது மொய்தீன் மகளிர் கல்லூரி, நன்னிலம் பாரதிதாசன் அரசு கல்லூரி, நேதாஜி கல்லூரி, ஆரூரான் பாலிடெக்னிக் கல்லூரி சுவர்களில் ஒட்டி விளம்பரம் செய்யப்பட்டது. திருவாரூர் மாவட்ட தலைவர் சு.கிருஷ்ணமூர்த்தி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அ.ஜெ.உமாநாத், மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் மு.இளமாறன், நாகை மாவட்ட மாணவர் கழகத் தலைவர் மு.குட்டிமணி, திருவாரூர் மாவட்ட மாணவர் கழகத் தலைவர் கே.அழகேசன், திரு.வி.க. கல்லூரி மாணவர் கழகத் தலைவர் வே.அறிவழகன் ஆகியோர் இதில் ஈடுபட்டனர். (22.06.2025)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *