சென்னை, ஜூன்.22- ஈரானில் உள்ள தமிழர்களை பாதுகாப்பாக அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அதற்கான உதவி எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
போர்
இஸ்ரேல்-ஈரான் இடையே தற்போது போர் ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக அந் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறையை அங்குள்ள தமிழர்களின் விவரங்களைப் பெற்று உடனடியாக அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், ஈரான் நாட்டில் இருந்து இந்திய வெளியுறவுத்துறை மூலமாக இந்தியர்கள் தாயகம் திரும்ப தொடங்கி உள்ளனர். இவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் களை கண்டுபிடித்து தமிழ் நாட்டுக்கு பாதுகாப்பாக அழைத்து வரும் பணி முடுக்கிவிடப்பட்டு உள் ளது. மேலும், அங்குள்ள நிலைமை தொடர்ந்து கண் காணிக்கப்பட்டு வருகிறது.
கட்டுப்பாட்டு அறை எண்கள்
தமிழர்களுக்கு தேவைப் படும் உதவிகளை செய்ய தமிழ்நாடு அரசு தயார் நிலையில் உள்ளது. இதற்கென்று டில்லியில் உள்ள தமிழ்நாடு இல் லத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டு உள் ளது. 011 24193300 என்ற தொலைபேசி எண்ணிலும், 9289516712 எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் . [email protected], [email protected] ஆகிய மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொண்டு உதவிகள் பெறலாம். அது மட்டுமின்றி, தமிழ் நாடு அரசின் சென்னை யில் உள்ள அயலகத் தமிழர் நலன் மற்றும் மறு வாழ்வுத்துறை ஆணைய ரகத்தில் செயல்பட்டு வரும் 24 மணி நேர கட்டணமில்லா உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம்.
அதாவது இந்தியாவுக் குள் என்றால் 1800 309 3793 என்ற எண்ணிலும், வெளிநாடு என்றால் 918069009901,08069009901, 91 8069009900, 08069009900 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ள வேண்டும். மேலும், [email protected]/ [email protected] ஆகிய மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளலாம்.
தங்கள் பகுதியில் உள்ள இந்திய தூத ரகம் வெளியிடும் அறிவுறுத் தல்களை பின்பற்றி பாது காப்பாக இருக்க கேட்டுக ்கொள்ளப்படுகிறது.