மின்சாரம்
‘தினமலர்’ என்னும் பூணூல் ஏட்டில் நேற்று (20.6.2023) கீழ்க்கண்ட செய்தி வெளியாகியுள்ளது.
“வாஞ்சிநாதனை இழிவுபடுத்தி கருத்தரங்கம்: தடுக்கக் கோரி மனு
தூத்துக்குடி, ஜூன் 20 சுதந்திரப் போராட்ட தியாகி வாஞ்சிநாதனை இழிவுபடுத்தி ஒரு அமைப்பு நடத்தும் கருத்தரங்கிற்கு அனுமதி தரக் கூடாது என தூத்துக்குடி கலெக்டர், எஸ்.பி.யிடம் பல்வேறு அமைப்பினர் மனு அளித்தனர்.
சிவகங்கை மாவட்ட பிராமணர் சங்க தலைவர் வெ.சிவக்குமார் சாஸ்திரி, மாவட்ட செயலர் கே.ஆர். வைத்தியநாதன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர், கலெக்டர் செந்தில்ராஜ், எஸ்.பி.பாலாஜி சரவணனை சந்தித்து நேற்று மனு அளித்தனர்
2019 ஜனவரி 31ஆம் தேதி அகில இந்திய மகாசபாவின் பன்னாட்டு செயலாளர் பூஜாசாகுன் காந்தி பொம்மையை துப்பாக்கியால் சுட்டு (செவுரிய திவஸ்) வீரர்களின் நாளைக் கொண்டாடினர். காந்தியை கொலை செய்த நாளை ஹிந்து அமைப்பினர் வீரர்களின் நாள் என்று கொண்டாடி வருகின்றனர்.
மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
தூத்துக்குடி ஈ.வெ.ரா., மையத்தில், இன்று திராவிடத் தமிழர் கட்சி என்ற அமைப்பினர், ஆஷ் துரை நினைவு சனாதன எதிர்ப்பு கருத்தரங்கம் நடத்துவதாக அறிவித்து உள்ளனர்.
அதில் சுதந்திரப் போராட்ட வீரர் வாஞ்சிநாதனை, ‘பார்ப்பன பயங்கரவாதி வாஞ்சிநாதனால் படுகொலை செய்யப் பட்ட ஆஷ் துரை நினைவு நாள் சனாதன எதிர்ப்பு கருத்தரங்கம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளனர்.
ஒரு குறிப்பிட்ட ஜாதியை, சமூகம் குறித்து கருத்தரங்கம் நடத்துவது இந்திய அரசியல் சட்டத்திற்கு புறம் பானதாகும்.
மூன்று மாதங்களுக்கு முன், எந்த ஒரு அமைப்பும் ஜாதி மதத்தினை இழிவு படுத்தியோ பேசியோ கூட்டம் நடத்தக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெளிவாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
எனவே, சுதந்திரத்திற்காக போராடி உயிர் நீத்த தியாகிகளை அவமதிக்கும் இந்த கருத்தரங்கிற்கு அனுமதி தரக்கூடாது.
இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.
இதில் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய செய்தி வாஞ்சிநாதன் என்ற சனாதன வெறியனான ஆர். வாஞ்சிநாதன் அய்யரை – சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட தியாகி என்று உச்சியில் வைத்துக் கூத்தாடுவது தான்.
ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்றுவிட்டு தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட வாஞ்சிநாதன் அய்யர் யார்? அவர் எத்தகையவர்?
ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதய்யர் என்ன காரணத்துக்காக அந்தக் கொடூரக் கொலையைச் செய்தார் என்பதற்கு ஆதாரங்களைத் தேடித் திரிய வேண்டியதில்லை.
1911 சூன் 17 ஆம் நாள் மணியாச்சி ரயில் நிலை யத்தில் ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்றுவிட்டு தன்னைத் தானே சுட்டுக் கொண்ட அந்தக் கோழை வாஞ்சிநாதய்யர் சுட்டுக் கொன்றதற்கான காரணத்தை ஒரு கடிதத்தில் எழுதி, தன் சட்டைப் பைக்குள் வைத்திருந்தானே!
அந்தக் கடிதம் ஒன்று போதும் – வாஞ்சிநாதன் அய்யர் யார்? அவனுடைய வன்மம் எத்தகைய பார்ப்பனத்தனம் கொண்டது என்பதற்கு! இதோ அந்தக் கடிதம்:
“ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு, அழியாத ஸனாதன தர்மத்தைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் தற்காலத் தில் தேசச் சத்துருவாகிய ஆங்கிலேயனைத் துரத்தி, தர்மத்தையும், சுதந்திரத்தையும் நிலை நாட்ட முயற்சி செய்து வருகிறான். எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குரு கோவிந்தர், அர்ஜுனன் முதலியவர் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்து வந்த தேசத்தில், கேவலம் கோமாமிசம் தின்னக் கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை (நிமீஷீக்ஷீரீமீ க்ஷி) முடி சூட்ட உத்தேசம் செய்து கொண்டு பெருமுயற்சி நடந்து வருகிறது. அவன் (நிமீஷீக்ஷீரீமீ) எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக்
கொல்லும் பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக் கினை செய்து கொண்டிருக்கிறோம். அதைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையே னாகிய நான் இன்று இச்செய்கை செய்தேன். இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவனும் செய்ய வேண்டிய கடமை.”
இப்படிக்கு,
R வாஞ்சி அய்யர்
R. Vandhi Aiyar of Shencotta
இந்தக் கடிதம் கொப்பளிக்கும் மதக் குருதி வெறி எத்தகையது என்பதை விளக்கவும் வேண்டுமோ!
அந்த வெள்ளைக்காரன்தானே ஜாதி வேறுபாடு இல்லாமல் எல்லோருக்கும், கல்வி, மருத்துவ வசதிகளைச் செய்து கொடுத்தான்.
அந்த வெள்ளைக்காரன்தானே ஹிந்து சனாதனத்தின் நடுப் புள்ளியான பால்ய விவாகத்தைத் தடை செய்யும் சாரதா சட்டத்தைக் கொண்டு வந்தான். அந்த வெள்ளைக்காரன்தானே ஹிந்து சனாதனக் கொள்கையான சதியைத் (உடன்கட்டை ஏறுதலை) தடை செய்தான்.
அந்த வெள்ளைக்காரன்தானே பார்ப் பனரைத் தவிர்த்த மற்ற பெண்கள் மார்பகத்தை மூடக் கூடாது என்றிருந்த கேவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைத் தான். இதுபோல ஏராளம் உண்டு.
இந்த ஹிந்து சனாதனத்தின் மீது வெள்ளைக்காரன் கை வைத்ததால்தான், வெள்ளைக் காரன்மீது இந்திய வெள்ளைக் காரனாகிய பார்ப்பனர்களுக்கு அடங்காக் கோபம் பீறிட்டது என்பதுதானே உண்மை!
(அதே நேரத்தில் அந்த வெள்ளைக்காரன் ஆட்சியில் சலாம் போட்டு, அடி வருடி பெரும் பதவிகளை அனுப வித்த வர்கள் எல்லாம் பெரும்பாலும் பார்ப்பனர்களே என்பதையும் மறந்து விடக் கூடாது)
ராமராஜ்ஜியத்தை உண்டாக் குவேன் என்று சொன்னபோது “மகாத்மா” காந்தி என்ற சொன்ன பார்ப்பனர்கள் ‘நான் சொல்லும் ராமன் வேறு; இராமாயண ராமன் வேறு!” என்று சொன்ன நிலையில் அந்த மகாத்மாவை துர் ஆத்மாவாகக் கருதி சுட்டுக் கொன்றவர்கள் யார்?
காந்தியார் நினைவு நாளில், இப்பொழுதுகூட, காந்தி உருவம் செய்து, அதற்குள் இரத்தம் போன்ற சிவப்பு நீரை நிரப்பிச் சுடுகிறார்கள் என்றால் இவர்களின் ஸனாதனம் எத்தகையது என்பதை உணர்வீர்! உணர்வீர்!!
கோட்சே சாகவில்லை இன்னும் பல வடிவங் களில் ‘வீர்’ உலா வருகிறார்கள் – எச்சரிக்கை!