சென்னை, நவ. 12 – சென்னை தி.மு.க கிழக்கு மாவட்டம் சார்பில் மகளிருடன் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற் றது. இதில் பங்கேற்று தி.மு.க துணை பொதுச் செயலாளரும் நாடாளு மன்ற உறுப்பினரான கனி மொழி உரையாற்றியதாவது:
“தமிழ்நாட்டில் பெண்களின் உரிமைக்கா கவும் அவர்களுடைய முன்னேற்றத்திற்காகவும் பெரும் பங்காற்றியது தி.மு.கதான். பெண்கள் கல்லூரிக்குச் செல்ல வேண்டும், வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதற்காக முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆட்சி யில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கலைஞர் வழியில் தற் போது நமது முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் அவர் கள் செயல்பட்டு வருகி றார். மகளிருக்கு இலவச பேருந்து பயணம், புதுமைப் பெண் திட்டம் போன்ற திட்டங்களைச் செயல்படுத்தி அவர்களது வாழ்க்கையில் வெளிச் சத்தை ஏற்படுத்தியுள் ளார். தற்போது உலகத்திற்கே வழிகாட்டியாக கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தைக் கொண்டு வந்து அவர்களது உரி மையை அங்கீகரித்துள் ளார். இந்த திட்டத்தைப் பெண்கள் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
பா.ஜ.க ஆட்சி செய் கின்ற மாநிலங்களில் பெண்களுக்கும் குழந்தை களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவு கிறது. ஆனால் தமிழ் நாட்டில் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் பெண்களின் கல்விக்காக வும் பெண்களின் பாது காப்பிற்காகவும் பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறார் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அவர்கள். மதத்தா லும், ஜாதியாலும் பிளவு படுத்த வேண்டும் என நினைப்பவர்களுக்கு ஒரு போதும் தமிழ்நாட்டில் இடம் அளிக்கக்கூடாது” என தெரிவித்துள்ளார்.