சிதம்பரம், ஜூன் 22- சிதம்பரம் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் 20.6.2025 அன்று மாலை 6 மணிக்கு சேத்தியாத்தோப்பு நடராஜா திருமண மண்டபத்தில் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தலைமையில், கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் முன்னிலையில் நடைபெற்றது.
விருத்தாசலம் மாவட்டத் தலைவர் த.சீ.இளந்திரையன், செயலாளர் ப.வெற்றிச்செல்வன், காப்பாளர் அ.இளங்கோவன், கடலூர் மாவட்ட செயலாளர் கவிஞர் எழிலேந்தி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
மாவட்டத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் பொதுக்குழு எவ்வாறு நடத்தப்பட்டது என்பதையெல்லாம் விளக்கி வரவேற்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ப.க. தலைவர் கோவி.நெடுமாறன், ப.க. செயலாளர் அ.செங்குட்டுவன், திருமுட்டம் ஒன்றிய தலைவர் கு.பெரியண்ணசாமி, ஒன்றிய செயலாளர் கொழை இரா.இராஜசேகரன், பாளையங்கோட்டை தமிழரசன், புவனகிரி என்.ஏ.இராமலிக்ம், பூந்தோட்டம் பூ.வே.அசோகன், பொதுக்குழு உறுப்பினர் மழவை. கோவி.பெரியார்தாசன், வலசக்காடு கிளை தலைவர் அர.வீரமணி, அள்ளூர் ஜெயபால், பெரியார் படிப்பக துணைத் தலைவர் ஆறு.கலைச்செல்வன், உடல்நிலை சரியில்லாத நிலையிலும் வருகை தந்து கலந்து கொண்ட மாவட்ட செயலாளர் யாழ்.திலீபன், மாவட்ட துணைச் செயலாளர் ப.முருகன், மாவட்ட இளைஞரணி செயலாளர் மா.பஞ்சநாதன் ஆகியோர் உரையாற்றினார்கள்.
வீ.அன்புராஜ் பாராட்டு
பொதுக்குழு சிறப்பாக நடத்தியதற்காக மாவட்டத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், மாவட்ட செயலாளர் யாழ்.திலீபன், மாவட்ட துணைத் தலைவர் அன்பு.சித்தார்த்தன், மாவட்ட துணைச் செயலர் ப.முருகன், பொதுக்குழு உறுப்பினர் மழவை.கோவி.பெரியார்தாசன், பொதுக்குழு உறுப்பினர் பா.இராஜசேகரன் ஆகியோருக்கு கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் பயனாடை அணிவித்து பாராட்டி சிறப்புரையாற்றினார்.
கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன புதிய பொறுப்பாளர்கள் பட்டியலை அறிவித்தார். அதன் விவரம் வருமாறு:
பரங்கிப்பேட்டை ஒன்றியம்
தலைவர் – கு.தென்னவன்
செயலாளர் – துரை.ஜெயபால்
புவனகிரி ஒன்றியம்
தலைவர் – என்.ஏ.இராமலிங்கம்
செயலர் – ஏ.பி.இராமதாஸ்
கீரப்பாளையம் ஒன்றியம்
தலைவர் – பூ.வே.அசோகன்
செயலர் – அள்ளூர் ஜெயபால்
காட்டுமன்னார்கோவில் ஒன்றியம்
தலைவர் – இரா.செல்வகணபதி
செயலர் – ஆண்டிபாளையம் மு.குணசேகரன்
குமராட்சி ஒன்றியம்
தலைவர் – வை.அர்ச்சுனன்
செயலர் – ப.பால்ராஜ்
தீர்மானங்கள்
பெரியார் கொள்கையாளரும், சுயமரியாதை கருஞ்சட்டைகாரருமான கொழை மு.பாலகுருசாமி மறைவிற்கும் – சிதம்பரம் மேனாள நகர தலைவர் புலவர் இராசாங்கம் மகனும் – நகர கழக செயலாளருமான இரா.பொய்யாமொழி ஆகியோர் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
பொதுக்குழு சிறப்பாக நடைபெற உதவி செய்த தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்களுக்கும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துத துறை மற்றும் மின்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்களுக்கும், மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜி.எம்.சிறீதர் வாண்டையார் அவர்களுக்கும், இக்குழு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
பெரியார் உலகத்திற்கு நிறைய அளவில் நன்கொடை திரட்டித் தருவது என்று தீர்மானிக்கப்பட்டது
விடுதலை சந்தா சேர்ப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.
இறுதியாக மாவட்டத் தலைவர் பூ.சி.இளங்கோவன் நன்றி கூறினார்.