கோவை பகுத்தறிவாளர் கழகத் தோழர் சா.சித்ரவேல் இல்லத்திற்கு வருகை தந்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் மறைந்த சா.சித்ரவேல் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சா.சித்ரவேல் துணைவியார் சகாயமேரி, குடும்பத்தினர் திலீபன், பா.சவுமியா, எழில், சகோதரர் சிவகுமார், கலைச்செல்வி, பிரபாவதி, வெற்றிசெல்வன் ஆகியோருக்கு ஆறுதல் கூறினார்.
கோவை மண்டல திராவிடர் கழக செயலராக இருந்த ச.சிற்றரசு கடந்த மாதம் மறைவுற்றார். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மறைந்த ச.சிற்றரசு படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சிற்றரசு அவர்களுடைய துணைவியார் வ.ராஜேஸ்வரி, மகன் இரா.சி பிரபாகரன், தாயார் முத்துலட்சுமி உள்ளிட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். உடன்: திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், பெரியார் மருத்துவ குழும தலைவர் மருத்துவர் கவுதமன், மாவட்ட தலைவர் தி.க. செந்தில்நாதன், மாவட்ட செயலாளர் புலியகுளம் க.வீரமணி, மாநகர தலைவர் ம.சந்திரசேகர், மாநகர செயலாளர் ச.திராவிடமணி, மாநில இளைஞரணி அமைப்பாளர் ஆ.பிரபாகரன், சிற்றரசு சகோதரிகள் கண்ணகி, இசைச்சொல்லி ஜனனி, இளமதி, பிரபாவதி, வனிதா, மற்றும் தோழர்கள்.