கன்னியாகுமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவராகவும், சிறந்த நல்லாசிரியராகப் பற்பல ஆண்டுகள் தொண்டாற்றிய நமது மதிப்புக்குரிய முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு தக்கலை எஸ்.கே.அகமது அவர்கள் (வயது 86) நேற்று (20.6.2025) அன்று காலமானார் என்ற துயரச் செய்தி கேட்டு, மிகவும் வருத்தமும், துன்பமும் அடைகிறோம்.
குமரி மாவட்ட திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழக அமைப்புகளில் முக்கிய மூத்த தலைவர்களில் மிஞ்சி இருந்தவர் அவர். ஈடற்ற இழப்பு அவருடையது!
அவரது ஆழ்ந்த கொள்கைப் பிடிப்பும், தந்தை பெரியார், அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் மற்றும் நம்மிடமும் அவர் காட்டிய கொள்கை மாறாப் பாதைப் பயணமும் நமது வணக்கத்திற்குரிய ஒன்றாகும்!
அவரை இழந்து வாடும் அன்னாரது குடும்ப உறவுகளுக்கும், இயக்கப் பகுத்தறிவாளர்கள், கொள்கை உறவுகளுக்கும் நமது ஆறுதலும், மறைந்த அவருக்கு நமது வீர வணக்கமும்!
வீர வணக்கம்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
21.6.2025
குறிப்பு: இன்று (21.6.2025) அவரது உடல் அடக்கம் செய்யப்படும் இறுதி நிகழ்வில் கழகப் பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்துகொண்டு, இறுதி மரியாதை செலுத்துவர்.