நன்னிலத்தில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவை மக்கள் திரள் பொதுக்கூட்டமாக எழுச்சியோடு நடத்துவோம்! திருவாரூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடலில் தீர்மானம்

Viduthalai

நன்னிலம், ஜூன் 21- நன்னிலத்தில்,சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, குடிஅரசு இதழ் நூற்றாண்டு நிறைவு விழாவை மக்கள்  திரள்  பொதுக்கூட்டமாக எழுச்சியோடு நடத்துவது, தமிழர் தலைவர் ஆசிரியருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது என திருவாரூர் மாவட்ட திராவிடர் கழக  கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

19-06-2025 வியாழன் மாலை 05.00 மணியளவில் நன்னிலம் படிப்பகத்தில் திருவாரூர் எழுச்சியுடன் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சு.கிருட்டிணமூர்த்தி, தலைமை வகித்தார். ஒன்றிய பகுத்தறிவாளர் கழக தலைவர் ச.கரிகாலன். அனைவரையும் வரவேற்றார். மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார். கூட்டத்தின் நோக்கத்தினை விளக்கி பேசினார். கழக காப்பாளர் வீர.கோவிந்தராஜன். நாகை மாவட்ட தலைவர் விஎஸ்டிஏநெப்போலியன். மாவட்ட செயலாளர் ஜெ.புபேஸ்குப்தா, திருவாரூர் மாவட்ட துணை எஸ்.எஸ்.எம்.கே.அருண்காந்தி. ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வில் திருவாரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் ஈவேரா.  மாவட்ட விவசாய தொழிலாளரணி செயலாளர் க.வீரையன். பகுத்தறிவாளர் கழக மாநில ஊடகத்துறை தலைவர் தஞ்சை மா.அழகிரிச்சாமி, மாநில மாணவர் கழக துணை செயலாளர் மு.இளமாறன், திருவாரூர் மாவட்ட துணை செயலாளர் ம.மனோஜ்.திருவாரூர் நகர தலைவர் கா.சிவராமன். நன்னிலம் ஒன்றிய தலைவர் இரா.தன்ராஜ். நன்னினும் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் திருமருகல் ஒன்றிய தலைவர் இராச.முருகையன்.

ஒன்றிய செயலாளர் சு.இராஜ்மோகன். நாகை மாவட்ட மாணவர் கழக தலைவர் மு.குட்டிமணி. வடுகக்குடி க.கலியபெருமாள். எஸ்.முருகையன். எ.பி.பழனிச்சாமி. நன்னிலம் நகரச் செயலாளர் சரவணன் ஆகியோர் கலந்துக் கொண்டு கருத்துக்களை தெரிவித்தனர். நிகழ்வினை மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக. பொன்முடி ஒருங்கிணைத்தார்

இறுதியாக ப.தமிழ்மணி நன்றி கூறினார்.

தீர்மானங்கள்

திருத்துறைப்பூண்டி முன்னாள் நகர தலைவர் தி.குணசேகரன், திருவாரூர் மாவட்ட துணை தலைவர் எஸ்.எஸ்.எம்.கே அருண்காந்தியின்  தாயார் தி.அமிர்தகவுரி,  கண்கொடுத்தவணிதம் ரெ.பிச்சையின் தாயார்  ரெ.காளியம்மாள். குடவாசல் ஒன்றியம் கீழப்பாளையம் சரவணன் தந்தை கிருஷ்ணன் ஆகியோரின் மறைவிற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும் வீர வணக்கத்தையும் தெரிவிக்கிறது.

சென்னையில் நடைபெற்ற தலைமை செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவினை ஏற்று செயல்படுத்துவது என முடிவு செய்யப்படுகிறது.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பங்கேற்கும் சுயமரியாதை இயக்கம் நூற்றாண்டு குடி அரசு இதழ் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டத்தை 07.07.2025 அன்று திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் மக்கள் திரள் கூட்டமாக மிக எழுச்சியுடன் நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது.

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்திற்கு வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கும்பகோணம், காரைக்கால் ஆகிய மாவட்டங்கள் சார்பாக உற்சாகத்துடன் வரவேற்பளிப்பது என தீர்மானிக்கப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *