பா.ஜ.க.விடம் விழிப்புடன் இருக்க கனிமொழி அறிவுறுத்தல்
எத்தனை முறை வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு முகாம்கள் நடத்தப்படுகிறதோ, அத்தனை முறையும் கவனமாக ஆய்வு செய்ய வேண்டும் என நிர்வாகிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அறிவுறுத்தியுள்ளார். குமரியில் நடந்த திமுக கூட்டத்தில் சிறப்புரையாற்றிய அவர், மகாராட்டிரா, அரியானாவில் செய்ததுபோல் பாஜக உண்மை வாக்காளர்களை நீக்கி சதி செய்யும் எனக் குற்றஞ்சாட்டினார்.
தங்கத்தில் முதலீடு…
ஒரே ஆண்டில் 37 சதவீதம் கூடுதல் லாபம்!
ஒரே ஆண்டில் 37 சதவீதம் கூடுதல் லாபம்!
தங்கம் விலை குறைகையில் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைவதுபோல, விலை அதிகரிக்கையில் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். ஏனெனில் கடந்த ஓராண்டில் தங்கத்தில் முதலீடு செய்தோருக்கு 37 சதவீதம் அதிக லாபம் கிடைத்துள்ளது. இது மும்பை பங்குச் சந்தையில் (5.91 சதவீதம்) கிடைத்ததை விட 6 மடங்கு அதிக லாபம் ஆகும். இதேபோல், கடந்த 2 ஆண்டுகளில் 29 சதவீதம், 3 ஆண்டுகளில் 25 சதவீதம் என தங்க முதலீட்டில் அதிக லாபம் கிடைத்துள்ளது.
பிளஸ் 2 போதும்: ஒன்றிய அரசில் 166 பணியிடங்கள்!
இந்திய விமான நிலையத்தில் இருக்கும் 166 துணைக் காவலர்கள் பணியிடங்களுக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பிளஸ் 2 தேர்ச்சி பெற்று, 21 -27 வயதுக்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இணைய வழி கணினி வழி தேர்வு மூலம் தேர்ச்சி நடைபெறும். 3 ஆண்டு ஒப்பந்தப் பணியான இந்த வேலைக்கு ரூ.22,500 வரை ஊதியம் வழங்கப்படும். வரும் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு:
4,500 பணியிடங்கள்
4,500 பணியிடங்கள்
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் 4,500 அப்ரென்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 202 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்து 20-28 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். மாத ஊதியம் ரூ.15,000 ஆகும். கணினிவழித் தேர்வு மற்றும் வட்டார மொழித்தேர்வு நடைபெறும்.