சென்னை, ஜூன் 21- சென்னை பெரியார் திடலில் 14.6.2025 சனிக்கிழமை மாலை 5 மணி அளவில் வட சென்னை, தென் சென்னை, ஆவடி, தாம்பரம், திருவொற்றியூர், கும்மிடிப்பூண்டி, சோழிங்கநல்லூர் மாவட்டங்களில் மகளிரணி மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
மகளிர் அணியைச் சேர்ந்த திராவிஎழில் கடவுள் மறுப்பு கூறினார். மகளிர் பாசறை வளர்ச்சிப் பணிகள் குறித்தும், பெரியார் உலகத்திற்கு இந்த மாவட்டங்களைச் சேர்ந்த மகளிர் தோழர்கள் பங்களிப்பு பற்றியும் கலந்தாலோசிக்கப்பட்டது. மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாநில மகளிர் பாசறை செயலாளர் பா மணியம்மை ஆகியோர் தங்கள் ஆலோசனைகளை வழங்கினர். மாதந்தோறும் மகளிர் தோழர்கள் சந்திக்க வேண்டியதன் அவசியம் பற்றியும், மகளிருக்கான சீருடை, பெரியார் உலகத்திற்கு நிதி திரட்டுவதற்கான முறைகள் பற்றியும், பெரியார் பிஞ்சு இதழ் சிறுவர்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டிய முறைகள் பற்றியும் மாநில மகளிரணி துணைச் செயலாளர் இறைவி, பொறியாளர் ச.இன்பக்கனி, மாநில மகளிளிரணி துணைச் செயலாளர் பெரியார் செல்வி, சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், தாம்பரம் மகளிர் அணி தலைவர் நாகவல்லி, தாம்பரம் மகளிர் பாசறை செயலாளர் உத்ரா, திருவொற்றியூர் மகளிர் பாசறை செயலாளர் யுவராணி, உமா செல்வராஜ் ஆகியோர் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். பெரியார் உலகம் பற்றி கழகத் துணைத் தலைவர் கவிஞர் அவர்களால் எழுதப்பட்ட அன்றைய விடுதலையில் வெளிவந்த கட்டுரை வாசிக்கப்பட்டது. மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை கூடுவது எனவும், ஒவ்வொரு மாவட்டமும் பெரியார் உலகத்திற்கு குறைந்தது 15 ஆயிரம் பணம் திரட்டி தமிழர் தலைவர் அவர்களைச் சந்தித்து வழங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும் இந்த நிகழ்வில் பூவை செல்வி, சுமதி, முகப்பேர் செல்வி, அருணா, அஞ்சனா, சுசித்ரா, இந்திரா,ஞான தேவி,கனிமொழி, விஜயலட்சுமி பெரியார் பிஞ்சு செம்மொழி ஆகிய தோழர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தோழர்களுக்கு சி. வெற்றிசெல்வி தேநீர் வழங்கினார். இறுதியாக இளவரசி நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.