களக்காடு பேருந்து நிலையத்திற்கு தந்தை பெரியார் பெயர் சூட்டுக! திருநெல்வேலி மாவட்ட கழக கலந்துறவாடல் கூட்டத்தில் தீர்மானம்

Viduthalai

களக்காடு, ஜூன் 21- கடந்த 13.6.2025 அன்று மாலை 6 மணிக்கு தச்சநல்லூர் பெரியார் அரங்கில் திருநெல்வேலி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் உற்சாகமாக நடைபெற்றது.

மாவட்ட கழகத் தலைவர் ச.இராசேந்திரன் தலைமைவ கித்தார்.மாநகர செயலாளர் ம.வெயிலுமுத்து வரவேற்புரை வழங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் தொடக்கவுரையாற்றினார். கழக காப்பாளர் இரா.காசி, மாநில இளைஞரணி துணைச்செயலாளர் மு.தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட கழக செயலாளர் இரா.வேல்முருகன் செயல்திட்ட உரை வழங்கினார். பொதுக்குழு உறுப்பினர் ந.குணசீலன், மாவட்ட துணைத்தலைவர் ம.மகேசு, மாவட்ட ப.க.செயலாளர் சு.திருமாவளவன், மாவட்ட இளைஞரணி செயலாளர் சு.பிரபாகரன், மாவட்ட மாணவர் கழக தலைவர் செ.சூர்யா, சேரன்மகாதேவி ஒன்றியத்தலைவர் கோ.செல்வசுந்தரசேகர், வீரவநல்லூர் தலைவர் மா.கருணாநிதி, சங்கரராசு, தச்சைபகுதி தலைவர்இரா.கருணாநிதி, மாணவர் பாரத், உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினார்.

நிறைவில் மாவட்டத் துணைச் செயலாளர் மாரி.கணேசன் நன்றி கூறினார்.

தீர்மானங்கள்

சுயமரியாதை வீரர் பாவலர் நெல்லை குமாரசுப்ரமணியன் மறைவுக்கு இக்கூட்டம் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

1932, 1962 ஆகிய ஆண்டுகளில் களக்காடு வந்ததின் நினைவாகவும், சேரன்மகாதேவி நூற்றாண்டு நினைவாகவும் களக்காடு பேருந்து நிலையத்திற்கு அறிவாசான் தந்தை பெரியார் பெயர் சூட்டுமாறு தமிழ்நாடு அரசை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

12.7.2025 அன்று மாலை களக்காட்டில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, குடி அரசு நூற்றாண்டு நிறைவு விழா, நூல்கள் அறிமுக விழாவிற்கு வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளிப்பதென தீர்மானிக்கப்படுகிறது.

“உலகம் பெரியார் மயம்-பெரியார் உலக மயம்” என்ற முன்னோக்கில் சிறுகனூரில் அமையவுள்ள பெரியார் உலகத்திற்கு நன்கொடை திரட்டி வழங்குவதென தீர்மானிக்கப்படுகிறது.

ஜூலை 10,11,12,13 ஆகிய தேதிகளில் குற்றாலத்தில் நடைபெறும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் மாணவர்கள், இளைஞர்களை பங்கேற்கச் செய்து என தீர்மானிக்கப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *