சிதம்பரத்தில் நடைபெற்ற மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் (20.06.2025) இறையூர் தங்க .ராச மாணிக்கம்- பொதுக்குழு உறுப்பினர், தனது 73ஆவது பிறந்த நாளை யொட்டி பெரியார் உலகத்திற்கு ரூ.1000 நன்கொடை கழக பொதுச் செயலாளர் வீ .அன்புராஜ் அவர்களிடம் வழங்கினார்.
– – – – –
நாகம்மையார் இல்லக்குழந்தைகள், சாமி கைவல்யம் முதியோர்களுக்கு உணவு வழங்கல்
காப்பாளர் மற்றும் இலால்குடி மாவட்ட துணைத் தலைவருமான மறைந்த உடுக்கடி அட்டலிங்கத்தின் முதலாம் ஆண்டு நினைவு நாளை (22.06.2025) முன்னிட்டு நாகம்மையார் இல்லக் குழந்தைகள், சாமி கைவல்யம் முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு அசைவ உணவு அவரது மகன் அ.பகுத்தறிவாளன் (உடற்கல்வி ஆசிரியர்) மற்றும் குடும்பத்தினர் சார்பில் வழங்கப்பட்டது.