சீனாவின் ஹேபேய் மாநிலத்தில் நடந்த இந்த நெகிழ்ச்சியான கதை, பிறந்து 10 நாட்களே ஆன இரட்டைச் சகோதரிகளைப் பற்றியது. பிறந்தவுடன் இரு வேறு குடும்பங்களால் தத்தெடுக்கப்பட்ட இவர்கள், 17 வயதில் தற்செயலாக மீண்டும் இணைந்தனர்.
ஹாய் சோவ் என்பவர், தன்னைப் போலவே முகச்சாயல் கொண்ட ஒரு பெண் பள்ளி அருகே உள்ள கடையில் பணிபுரிவதாக தோழி மூலம் அறிந்தார். அந்தப் பெண்ணை முதன்முதலில் சந்தித்தபோது, அவருக்கு இனம் புரியாத உணர்வு ஏற்பட்டது.
பழகத் தொடங்கியபோது, ஒரே பிறந்தநாள், ஒத்த குரல், ஒரே மாதிரியான உணவுப் பழக்கம் போன்ற பல ஒற்றுமைகளை இருவரும் கண்டறிந்தனர். இவை அவர்களை நெருங்கிய தோழிகளாக்கின.
14 மாதங்களுக்குப் பிறகு, அவர்களது குடும்பத்தினர் இருவரும் இரட்டைச் சகோதரிகள் என்ற உண்மையை வெளிப்படுத்தினர். தற்போது 37 வயதாகும் இவர்களின் பிள்ளைகள் ஒரே பள்ளியில், ஒரே வகுப்பில் படிக்கின்றனர். சகோதரிகள் அருகருகே வசித்து வருகின்றனர்.
இருப்பினும், 20 ஆண்டுகள் ஆகியும் அவர்களால் தங்கள் உண்மையான பெற்றோரைக் கண்டறிய முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்க வருத்தப்பட வேண்டிய செய்தியாகும்.