ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் வேங்கட பார்த்தசாரதி.
இவர் தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் ஆய்வு மேற்கொள்ளச் சென்றுள்ளார்.
அவர் சென்ற கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்.
இந்த நிலையில், “இந்த ஊரில் பஞ்சாயத்து தலைவர் மேடைக்கு வரவும்” என்று அழைக்கிறார்.
உடனே அருகில் உள்ள பா.ஜ.க. தொண்டர் ஒருவர், “அவர் அங்கேயே இருக்கட்டும்” என்று அவரிடம் கூற, “ஏன் அவர் கிறிஸ்டியனா?” என்று சட்டமன்ற உறுப்பினர் கேட்கிறார்.
அதற்கு “இல்லை அவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்” என்று கூறுகிறார்.
இந்த இடைவெளியில் அந்த பஞ்சாயத்து தலைவர் மேடைக்கு அருகில் வந்துவிடுகிறார்.
அவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்று தெரிந்த உடனேயே, சட்டமன்ற உறுப்பினர் வேங்கட பார்த்தசாரதி அவரை, “நீ மேடைக்கு வரவேண்டாம்” என்று தடுத்து, “மேடைக்கு கீழேயே நின்றுகொள்” என்று கூற, அவரும் அந்த பொது அவையில் அவமானத்தால் குறுகிப்போய் அங்கேயே நின்றுவிடுகிறார்.
மருத்துவருக்கு படித்து பல மக்களுக்கு மருத்துவம் பார்க்கும் ஒருவர், சட்டமன்றத்தில் பாஜக சார்பில் சட்டமன்ற உறுப்பினர் பதவி பெற்ற ஒருவர், பொதுமேடையில் இவ்வளவு ஜாதி வெறியோடு செயல்படுகிறார் என்றால் இவரிடம் மருத்துவம் பார்க்கவந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்களை எவ்வாறு கையாண்டு சிகிச்சை அளித்திருப்பார்?
பா.ஜ.க. எப்படியானவர்களை தேர்ந்தெடுத்து பதவி கொடுக்கிறது என்பதை இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.
இந்நிலையில் “இந்த பா.ஜ.க.தான்” கூட்டணியோடு 2026ஆம் ஆண்டு தமிழ்நாட்டை ஆளப்போகிறதாம்!!