பிரதமர் அலுவலகத்தில் காங்கிரஸ் உள்பட பத்து கட்சிகள் மனு
புதுடில்லி, ஜூன் 21 மணிப் பூரில் இரு பிரிவினருக்கு இடையே கடந்த மாதம் 3-ஆம் தேதி மூண்ட கலவரம் இன் னும் முடிவுக்கு வரவில்லை. மாநிலம் முழுவதும் அவ்வப் போது நடந்து வரும் மோதல்களில் உயிரிழப்புகள் தொடர்கின்றன. சுமார் 50 நாட்களாக நீடித்து வரும் இந்த கலவரத்தில் இது வரை 100-க்கும் மேற்பட்டோர் கொல் லப்பட்டு உள்ளனர். ஏராளமா னோர் காயமடைந்து உள்ளனர். ஆயிரக்கணக்கா னோர் இன்னும் நிவாரண முகாம் களிலேயே நாட்களை கழித்து வருகின்றனர்.
மாநிலத்தில் நீடித்து வரும் கலவரம் தொடர்பாக ஒன்றிய பா.ஜனதா அரசை மனிதாபி மானமில்லாத நடவடிக் கையை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குறைகூறி வரு கிறது. இந்த நிலையில் மணிப் பூர் கலவரம் தொடர்பாக காங்கிரஸ் , திரிணாமுல் உள் ளிட்ட 10 எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது. காங்கிரஸ் , ஆம் ஆத்மி , திரிணாமுல் காங்கிரஸ் , ஜே.டி.யு உள்ளிட்ட 10 எதிர்க்கட்சிகள் கூட்டாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது. அனைத்து சமுதாய மக்களுடன் உடனடி யாக பேச்சுவார்த்தையில் ஈடு பட வேண்டும். மணிப்பூர் ஆயு தம் தாங்கிய குழுவினருடன் இருந்து உடனடியாக ஆயு தங்கள் அனைத்தையும் திரும்ப பெற வேண்டும். மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி உடனடியாக தலையிட வேண் டும் என அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது