ஆவடி மாவட்ட கழக சார்பில் ஆவடி நகர பகுதி கலந்துரையாடல் கூட்டம் 18.6.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்கு பல்லவன் நகரில் உள்ள ஆவடி நகர கழக துணை செயலாளர் கண்ணன் இல்லத்தில் நகர தலைவர் முருகன் தலைமையில் மாவட்ட கழக தலைவர் கார்வேந்தன், செயலாளர் இளவரசன், அமைப்பாளர் உடுமலை வடிவேல் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக தலைமை கழக அமைப்பாளர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டு கழக வளர்ச்சி மற்றும் செயல்பாடு குறித்து விளக்க உரையாற்றினார். கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் பூவை தமிழ்ச்செல்வன், நகர செயலாளர் தமிழ்மணி, துணை செயலாளர் வஜ்ரவேல், மாவட்ட ப.க.துணைச்செயலாளர் கார்த்திக்கேயன், ஜெயராமன் ப.க., மகளிரணி தோழர்கள் எல்லம்மாள், சுகந்தி, பூவை லலிதா மற்றும் பெரியார் பிஞ்சுகள் நன்னன், இனியன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.கூட்டத்தில் தெருமுனைக் கூட்டங்கள் நடத்தவும் ஆவடி பெரியார் மாளிகையில் மாண வர்கள் போட்டித் தேர்வுக்கு தயாராகும் வகையில் புத்தகம் வாங்கி வைப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இறுதியில் நகர செயலாளர் தமிழ்மணி நன்றி கூறினார்.